hdfc account interest hdfc bank: இந்தியாவில் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த முக்கிய பதிவு. எச்டிஎஃப்சி வங்கி, கால வைப்பு நிதித் திட்டங்களுக்கு (term deposits) வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அதிகபட்சமாக, 91 நாள் முதல் 6 மாதம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு வட்டி விகிதத்தில் 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது.
Advertisment
இதன்பிறகு, 91 நாள் முதல் 6 மாதத்திற்கான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 3.5% வட்டி மட்டுமே கிடைக்கும். இதே திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு மட்டும் 4% வட்டி கிடைக்கும்.
7 நாள் முதல் 29 நாட்கள் வரையிலான டெபாசிட்டுக்கு 2.50% வட்டி வழங்கப்படும். 30 முதல் 90 நாட்கள் வரையிலான டெபாசிட்டுக்கு 3% வட்டி கிடைக்கும். 9 மாதம் முதல் ஓராண்டுக்குள் மெச்சூரிட்டி அடையக்கூடிய கால வைப்பு நிதித் திட்டங்கள் இனி 4.4% வட்டி மட்டுமே கொடுக்கும்.ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான கால வைப்பு நிதிக்கு 5.10% வட்டி கிடைக்கும். இப்போது, ஹெச்டிஎஃப்சி வங்கி பொதுமக்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு (ரூ.2 கோடிக்கு கீழ்) வழங்கும் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
அனைத்து திட்டங்களிலுமே பொதுமக்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி கிடைக்கும். சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களின் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்கு ஹெச்டிஎஃப்சி வங்கி 6.25% வட்டி கொடுக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil