Hdfc bank account hdfc account: எச்டிஎப்சி வங்கி ராணுவ வீரர்களின் குடும்பத்திற்காக அறிமுகப்படுத்தி இருக்கும் சூப்பரான திட்டம் தான் ஷௌர்ய கே.ஜி.சி கார்டு’ (Shaurya KGC Card)
இதன் மூலம் என்ன பயன் தெரியுமா? ராணுவ வீரர்களின் குடும்பத்தை சேர்ந்த விவசாயிகள் விதை, உரம் போன்ற விவசாய சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்க முடியும்.மேலும், இந்த நிதியில் இருந்து விவசாய இயந்திரங்கள், நீர்ப்பாசனத்திற்கான உபகரணங்கள் போன்ற பொருட்களையும் வாங்க முடியும். அவர்களுக்காக எச்டிஎப்சி வழங்கும் கிரெடிட் கார்டு தான் இந்த ஷௌர்ய கே.ஜி.சி கார்டு.
இந்த கார்டு அடிப்படையில் 10 லட்சம் ரூபாய் வரையிலான ஆயுள் காப்பீடும் கிடைக்கும். இந்த மிகச் சிற்ந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய HDFC -ன் நிர்வாக இயக்குனர் ஆதித்யா பூரி ”இப்படி ஒரு திட்டத்தை தங்கள் வங்கி அறிமுகப்படுத்தியத்தை எண்ணி பெருமைக் கொள்வதாக” கூறினார்.
இப்படி ஒரு மிகச் சிறந்த திட்டம் அறிமுகம் ஆகி இருப்பதை விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதுமட்டுமில்லை, இந்த சிறப்பு கார்டை எப்படி பெறுவது என்ற விவரங்களை வங்கிக்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம். இந்த கார்டு மூலம் விவசாயிகள் குறிப்பிட்ட தொகையை கார்டில் இருந்து பயன்படுத்தி கொண்டு விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil