hdfc mclr rate : ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து, எச்டிஎப்சி வங்கி MCLR வட்டி விகிதத்தை நேற்று (8.4.19) முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது.
எச்எடிஎப்சி வங்கியின் இந்த முடிவால் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் திட்டங்கள் மீதான ஈஎம்ஐ குறையும். புதிதாகக் கடன் பெறுபவர்கள் மட்டுமல்லாமல் ஃப்ளோட்டிங் ரேட்டில் (மிதவை கடன் திட்டம்) கீழ் பெற்ற கடனுக்கும் ஈஎம்ஐ குறையும்.
எச்டிஎப்சி வங்கியில் 8.75 சதவீதமாக இருந்த வந்த MCLR வட்டி விகிதம் தற்போது 0.10 சதவீதம் குறைக்கப் பட்டு, 8.65 சதவீதம் ஆகியுள்ளது. அதே போல், ஆறு மாத, மூன்று மாத, ஒரு மாத அளவீடுகளிலும் குறைக்கப் பட்டு, அவை முறையே. 8.45%, 8.35%, 8.30% என இருக்கும்.
இதே போல் மற்ற வங்கிகளின் வட்டி சதவீதங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்.4ஆம் தேதி, ரிசர்வ் பாங்கின் நடப்பு நிதியாண்டுக்கான் அமுதல் நாணய கொள்கைக் கூட்டம் நடந்தது.அதில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப் பட்டு, 6 சதவீதமாகவும், நடப்பு ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டது.
ரூ. 10,000 மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும். இல்லையென்றால் ரூ.500 அபராதம்!
இதனையடுத்து வங்கி நிறுவனங்கள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து வருகின்றன.
கடந்த ஏப்.2ஆம் தேதி ஐசிஐசிஐ வங்கியும் முன்னதாக MCLR வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்து அறிவித்திருந்தது! அதன்படி 8.5%, 3மாதங்களுக்கு 8.55% 6 மாதங்களுக்கு 8.7% மற்றும் ஒரு வருடத்துக்கானது 8.75% என்று ஆனது.