Advertisment

HDFC: ஃபிக்சட் டெப்பாசிட் வட்டியில் திடீர் மாற்றம்… புதிய ரேட் தெரியுமா?

HFDC வங்கி சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு ஃபிக்சட் டெப்பாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
HDFC Bank hikes FD rates: Fixed deposit interest rates compared with SBI, PNB, ICICI Bank rates

ஹெச்டிஎஃப்சி வைப்புத் தொகை வட்டி வீதம் உயர்வு

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி, 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெப்பாசிட் திட்டங்களின் வட்டி விகிதத்தை மாற்றியமைத்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

Advertisment

புதிய வட்டி விகிதங்களில் பொது வாடிக்கையாளர்களுக்கு 2.50% முதல் 5.60% வரையிலான வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

புதிய வட்டி விகிதம்

  • 7 முதல் 29 நாட்கள் வரையிலான FDகளுக்கு 2.50 % வட்டி
  • 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான FDகளுக்கு 3% வட்டி
  • 91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான FDகளுக்கு 3.5% வட்டி
  • 6 மாதம் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரையிலான FDகளுக்கு 4.4% வட்டி
  • 9 மாதம் 1 நாள் முதல் 1 ஆண்டு வரையிலான FDகளுக்கு 4.4% வட்டி
  • 1 ஆண்டு FDக்கு 5.10% வட்டி
  • 1 ஆண்டு1 நாள் முதல் 2 ஆண்டு வரையிலான FDகளுக்கு 5.10% வட்டி
  • 2 ஆண்டு 1 நாள் முதல் 3 ஆண்டு வரையிலான FDகளுக்கு 5.20% வட்டி
  • 3 ஆண்டு 1 நாள் முதல் 5 ஆண்டு வரையிலான FDகளுக்கு 5.45% வட்டி
  • 5 ஆண்டு 1 நாள் முதல் 10 ஆண்டு வரையிலான FDகளுக்கு 5.60% வட்டி கிடைத்திடும்

இந்த அனைத்து ஃபிக்சட் டெப்பாசிட் திட்டங்களிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி கிடைக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits Hdfc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment