Fixed Deposits | ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி தனது மூத்த குடிமக்களுக்கு மட்டுமேயான சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது.
இந்த சிறப்பு மூத்த குடிமக்கள் பராமரிப்பு ஃபிக்ஸட் டெபாசிட், மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகித பலன்களை வழங்குகிறது.
இத்திட்டம் மே 2020 இல் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், மூத்த குடிமக்கள் பராமரிப்பு FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மே 10, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் பராமரிப்பு எஃப்.டி விவரங்கள்
ஹெச்.டி.எஃப்.சி மூத்த குடிமக்கள் பராமரிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் உடன் அதிக வட்டி விகிதத்தை மூத்தக் குடிமக்கள் அனுபவிக்க முடியும்.
வழக்கமான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை விட தற்போதுள்ள பிரீமியமான 0.5% தவிர, மூத்த குடிமக்கள் பராமரிப்பு எஃப்.டி திட்டத்தில் 0.5% பிரீமியத்திற்கு மேல் கூடுதலாக 0.25% பெற முடியும்.
வட்டி விகிதம்
இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் மூத்தக் குடிமக்கள் 7.75 சதவீதம் வட்டி விகிதத்தை பெறுவார்கள்.
இதே கால அளவு கொண்ட ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கும் 7.75 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
வயது தகுதி
60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மட்டுமே முதியோர் சிட்டிசன் கேர் எஃப்டிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
குறைந்தப்பட்ச முதலீடு
தனிநபர்கள் மூத்த குடிமக்கள் பராமரிப்பு FD இல் குறைந்தபட்சம் ரூ. 5000 மற்றும் அதிகபட்சம் ரூ. 4,99,99,999.99 (அதாவது ரூ. 5 கோடிக்கும் குறைவாக) முதலீடு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“