hdfc bank hdfc bank online : மியூட்சுவல் ஃபண்டுகளுக்கு எதிராக உடனடி கடன்களை பெறக்கூடிய வசதி hdfc வங்கியில் உள்ளது. இந்த திட்டம் எத்தனை பேருக்கு தெரியும்.
Advertisment
வங்கியில் பணத்தை சேமிக்கும் போதே அதிகப்படியான லாபத்தை வழங்கும் திட்டங்களில் ஒன்றே மியூட்சுவல் ஃபண்டுகள். இந்த மியூட்சுவல் ஃபண்டு முதலீட்டுக்கு மேல், வாடிக்கையாளர்களுக்கு அவசரமகா பணம் தேவையென்றால் வங்கிகளில் கடன் பெற முடியும். எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் இந்த கடன் வசதியை எப்படி பெறலாம் என்று இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
hdfc வங்கி வழங்கும் சூப்பர் திட்டம்!
1. எச்டிஎப்சி வங்கியில் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் மேலும் சிஏஎம்எஸ் லாகின் வசதியை பெற்றிருக்க வேண்டும்.
2. சிஏஎம்எஸ் சேவையை வழங்கும் 10 மியூட்சுவல் கம்பெனிகளுக்கு அவர்கள் இந்த வசதியை வழங்குகிறார்கள்.
3. எச்டிஎப்சி வங்கியின் முகப்புப் பக்கத்திற்கு சென்று, பத்திரங்களுக்கு எதிரான கடன் என்கிற இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
4. அடுத்த செயல்முறை இன்டர்நெட் பேங்கிங் வசதிக்கு லாக் இன் செய்து அதன் பிறகு உங்கள் சிஏஎம்எஸ் கணக்கிற்குள் நுழையுங்கள்.
5. சிஏஎம்எஸ் போர்ட்டலில் நீங்கள் லோன் வாங்க விரும்பும் நிதித் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி யை பெறுவீர்கள்.
6. ஒருமுறை ஓடிபி சரிபார்ப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தால் அதன் பிறகு நீங்கள் பெறக்கூடிய லோன் தொகையை நீங்கள் பார்க்கலாம்