தனியார் துறை வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி (HDFC Bank) பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதம் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
வங்கி வெளியிட்ட தகவலின்படி, 1 ஆண்டிற்கான வட்டி விகிதம் 0.10 சதவீதம் உயர்த்தப்பட்டு, 5 சதவீதத்தில் இருந்து 5.10 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், 1 ஆண்டு முதல் 2 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கும் 0.10 சதவீதம் வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. அதன்படி, 5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், 5.10ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர, 5 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட் திட்டங்களை கொண்ட சீனியர் சிட்டிசன்களுக்கு 0.25 சதவீதம் கூடுதலாக வட்டி விகிதம் கிடைக்குகிறது. இந்த சலுகையானது, வழக்கமாக சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் பிக்சட் டெபாசிட் கணக்கிற்கான கூடுதல் 0.50 சதவீத வட்டி விகித்ததுடன் சேர்த்து வழங்கப்படும்.
Advertisment
Advertisement
கடந்த பிப்ரவரி மாதம், ஹெச்டிஎப்சி வங்கி, 1 ஆண்டிற்கான பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 0.10 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்திருந்தது. அப்போது, 4.9 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்ந்தது. 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 0.5 சதவீதம் வட்டி வகிதம் உயர்த்தப்பட்டு, 5.40இல் இருந்து 5.45% ஆக உயர்த்தப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil