ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) பாலிசி விகிதங்களை உயர்த்திய பிறகு, நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி வங்கி அதன் நிலையான வைப்புத்தொகைகளுக்கு (எஃப்டிகள்) வழங்கப்படும் வட்டியை அதிகரித்துள்ளது.
HDFC வங்கி இப்போது 60 வயதுக்குட்பட்ட முதலீட்டாளர்களுக்கு 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை 2 கோடி ரூபாய்க்கு குறைவான வைப்புத்தொகைக்கு 6.10 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது, அதே சமயம் மூத்த குடிமக்கள் அதே டெபாசிட்டில் 6.60 சதவீதத்தைப் பெறுவார்கள்.
6.10 சதவீதம் என்பது முன்னணி வங்கிகள் 3-5 ஆண்டுகளுக்கு ரூ.2 கோடிக்கு குறைவான வைப்புத்தொகைக்கு வழங்கும் அதிகபட்ச வட்டி விகிதமாகும்.
அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி வட்டி விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா)
கொடுக்கப்பட்ட டெபாசிட் காலமான 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை, எஸ்பிஐ முதலீட்டாளர்களுக்கு ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு 5.60 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது,
மூத்த குடிமக்களுக்கு 6.10 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)
பஞ்சாப் நேஷனல் வங்கி 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை, PNB முதலீட்டாளர்களுக்கு ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு 5.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கு 6.25 சதவீதமாக இருக்கும். இது அனைத்து வைப்பு காலங்களிலும் வங்கி வழங்கும் மிக உயர்ந்த வட்டி விகிதமாகும்.
ஐசிஐசிஐ வங்கி
நிர்ணயிக்கப்பட்ட டெபாசிட் காலமான 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை, ஐசிஐசிஐ வங்கி முதலீட்டாளர்களுக்கு ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கு 6.10 சதவீத வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 6.60 சதவீதமாக வழங்குகிறது.
HDFC வங்கியைப் போலவே, இது அனைத்து வைப்பு காலங்களிலும் ICICI வங்கி வழங்கும் மிக உயர்ந்த வட்டி விகிதமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“