தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி இரண்டு சிறப்பு கால வைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நல்ல வருமானம் தேடும் வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.
இந்தத் திட்டங்கள் முறையே 35 மற்றும் 55 மாதங்கள் கொண்டவை ஆகும். இந்தத் திட்டங்களில் 7.20 சதவீதம் மற்றும் 7.25 சதவீதம் வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
கூடுதலாக, மூத்த குடிமக்கள் வாடிக்கையாளர்களுக்கு 0.5 சதவீதம் வரை கூடுதல் வட்டி விகிதம் கிடைக்கும். ரூ. 2 கோடிக்குக் கீழ் உள்ள வைப்புத்தொகைகளுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்புக் கால நிரந்தர வைப்புத் திட்டங்கள் ஆகும்.
இது தொடர்பாக வங்கி சிஎம்ஓ ரவி சந்தானம் கூறுகையில், “நிலையான வைப்புகளில் முதலீடு என்பது உறுதியான வருமானத்தை வழங்கும் முதலீட்டிற்கான பாதுகாப்பான கருவிகளில் ஒன்றாகும்.
அதிக வருமானத்துடன் நீண்ட காலத்திற்கு தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் வாடிக்கையாளர் அல்லாதவர்களுக்கும் இந்தப் புதிய திட்டங்கள் பெரிதும் பயனளிக்கும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“