தனியார் வங்கிகள் அவ்வப்போது வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு சலுகைகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில், தற்போது பிரபல தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி, Festive treats 3.0 என்ற பெயரில், தனது வாடிக்கையாளர்களுக்கு கார்ட், கடனுதவி, ஈஸி இஎம்ஐ போன்றவற்றில் 10 ஆயிரம் ஆஃபர்களை வழங்கியுள்ளது. இதற்காக, ஹெச்டிஎப்சி 100 க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்படும் 10,000 க்கும் மேற்பட்ட வணிகர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.
என்னென்ன சலுகைகள்
பிரீமியம் செல்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக், நோ காஸ்ட் ஈஎம்ஐ வசதியும், மின்னணு மற்றும் வாஷிங் மெஷின் மற்றும் குளிர்சாதனப் பெட்டி போன்ற நுகர்வோர் பொருட்களுக்கு கட்டணமில்லா ஈஎம்ஐ மற்றும் 22.5 சதவிகிதம் கேஷ்பேக் ஆஃபர்ஸூம், தனிநபர் கடனுதவி 10.25 சதவிகிதம் சலுகையுடன் வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் 7.50 விழுக்காடு வட்டியில் கார் லோனை பெறலாம். அதுமட்டுமின்றி, மொத்த தொகையை முன்கூட்டியே செலுத்தும்போது எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை. இரண்டு சக்கர வாகனங்களை பொறுத்தவரையில், லோன்மூலம் 100 விழுக்காடு நிதியை பெற முடியும்
.வட்டி விகிதம் 4 சதவிகிதம் குறைவாக அளிக்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது.
டிராக்டர் லோனில் 90 விழுக்காடு நிதியுதிவும்,ஸூரோ பிராசஸ் பீஸ் சலுகையுடன் வருகிறது. அதே போல, வணிக வாகனக் கடன்களுக்கான பிராசஸிங் கட்டணத்தில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதுமட்டுமின்றி, கடன் வழங்குவதில் ரூ .75 லட்சம் வரை எவ்வித கிரான்டியும் இல்லாமல் வணிகக் கடன்களையும், அதன் பிராசஸிங் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியும் வழங்குகிறது.
இதுகுறித்து பேசிய ஹெச்டிஎப்சியில் கடன் வழங்கும் குழுவின் தலைவர் பராக் ராவ், " இந்த பண்டியை காலத்தை மேலும் மகிழ்ச்சியான காலமாக மாற்றிய festive treat 3.0 அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஆன்லைன், ஆப்லைன், ஹைபர்லோகல் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆஃபர்களை பெறுகின்றனர்.
இந்தியாவில் கிரெடிட், டெபிட் மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகளின் பணப்பரிவர்த்தனையில் மூன்றில் ஒரு பங்கு எச்டிஎஃப்சி வங்கி கார்ட்களில் நடைபெறுவதால், அதனை மேலும் ஊக்கப்படுத்த சலுகைகள் வழங்குகிறோம். தற்போது, பொருளாதாரம் மீண்டும் சீராகியுள்ளதால், கடந்தாண்டைக் காட்டிலும் அதிகளவில் மக்கள் செலவுகளைச் செய்வார்கள்" என்றார்.
பல்வேறு சலுகைகளை வழங்குவதற்காக ஆப்பிள், அமேசான், ஷாப்பர்ஸ் ஸ்டாப், எல்ஜி, சாம்சங், சோனி, டைட்டன் மற்றும் சென்ட்ரல் உள்ளிட்ட வணிகர்களுடன் வங்கி கூட்டு சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.