HDFC Bank XpressWay: நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கியான ஹெச்.டி.எஃப்சி வங்கி, தனது சேவைகளை வழங்கும் டிஜிட்டல் தளமான எக்ஸ்பிரஸ்வே (XpressWay)-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இது வாடிக்கையாளர்கள் வங்கி சேவையை விரைவாக பெற உதவுகிறது.
மேலும் இது, எக்ஸ்பிரஸ் தனிநபர் கடன், எக்ஸ்பிரஸ் வணிகக் கடன், எக்ஸ்பிரஸ் கார் கடன், எக்ஸ்பிரஸ் வீட்டுக் கடன், கார்டுகளில் எக்ஸ்பிரஸ் கடன், எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்டு, எக்ஸ்பிரஸ் சேமிப்புக் கணக்குகள், சேவைப் பயணங்கள் மற்றும் பலவகையான வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
ஏற்கனவே இருக்கும் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு வேகமான, தடையற்ற, காகிதமற்ற, மற்றும் தாங்களே தங்கள் தேவைகளை கோரும் அல்லது பூர்த்தி செய்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இது, வாடிக்கையாளர்கள் பண்டிகைக் கால ஷாப்பிங்கில் ஈடுபடுவதற்கும், நிதியை எளிதாக அணுகுவதற்கும் அனுமதிக்கிறது.
இது குறித்து, ஹெச்டிஎஃப்சி வங்கியின் பேமெண்ட்ஸ், நுகர்வோர் நிதி மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் பராக் ராவ் கூறுகையில், “எக்ஸ்பிரஸ்வே வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட கண்டுபிடிப்புக்கான HDFC வங்கியின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது, இது ஒரு டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குகிறது.
இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவான, காகிதமற்ற மற்றும் சுய சேவை வங்கியை மேம்படுத்துகிறது. பண்டிகைக் காலத்தில் இந்த தளத்தை நாங்கள் தொடங்குவதால், கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“