பாரத ரிசர்வ் வங்கி சமீபத்தில் அனைத்து வங்கி மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் தங்களின் கடன் தவனைகளுக்கு 3 மாத அவகாசம் கொடுக்க வேண்டும் என கூறியிருந்த நிலையில் ஹெச்டிஎப்சி வங்கி உட்பட அனைத்து வங்கிகளும் அவகாசம் குறித்த அறிவிக்கைகளை வாடிக்கையாளர்களுக்காக வெளியிட்டுள்ளன. இந்த மூன்று மாத அவகாச காலத்தில் அதாவது மார்ச் 1 முதல் 31 மே 2020 வரையிலான காலத்தில் வட்டி மற்றும் முதன்மைத் தொகை செலுத்துவது ஒத்திவைக்கப்படும் மேலும் இந்த அவகாசம் முடிந்த பின்னர் வாடிக்கையாளர்கள் தவனைத் தொகையை திரும்ப செலுத்தினால் போதும்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
வாகன கடன், தனிநபர் கடன் மற்றும் வீட்டு கடன் உள்ளவர்கள் ஹெச்டிஎப்சி வங்கி கடன் ஈஎம்ஐ அவகாச திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அவகாசம் என்பது ஈஎம்ஐ (EMI)’ ஐ தற்காலிகமான ஒத்திவைத்தல் அல்லது தள்ளிவைத்தல் மட்டுமே அது ஈஎம்ஐ’ ஐ தள்ளுபடி செய்தல் இல்லை.
Advertisment
Advertisements
கடன் வாங்கியவர்கள் ஹெச்டிஎப்சி வங்கியின் ஈஎம்ஐ அவகாசத்தை தேர்ந்தெடுத்தால் வங்கி அவர்களிடம் ஈஎம்ஐ செலுத்துவதுக் குறித்து 31 மே 2020 வரை கேட்காது. எனினும் அவகாச காலத்தில் வட்டி தொடர்ந்து முதன்மை நிலுவைத் தொகையோடு வளரும். அவகாச காலத்துக்கு ஏற்ப கடனுக்கான கால அளவு நீட்டிக்கப்படும். எடுத்துக்காட்டாக கடன் வாங்கிய ஒருவர் மார்ச் 2020 க்கான ஈஎம்ஐ’ ஐ செலுத்திவிட்டு அவகாசத்தை தேர்ந்தெடுத்தால், அவருக்கான கடன் காலம் 2 மாத காலத்துக்கு கூடுதலாக நீட்டிக்கப்படும்.
ஒருவேளை ஹெச்டிஎப்சி வங்கி ஈஎம்ஐ அவகாசத்தை கடன் வாங்கிய ஒருவர் பெற விரும்பவில்லை என்றால் எந்த நடவடிக்கையும் ஒருவர் செய்ய வேண்டியதில்லை. வழக்கப்படி நிலுவை தேதிகளில் ஈஎம்ஐ தொகை தொடர்ந்து கழிக்கப்படும் மேலும் கட்டண வழிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது.
ஆனால் கடன் வாங்கிய ஒருவர் ஈஎம்ஐ செலுத்துவதை இந்த நேரத்தில் தவிர்த்தால், அவர் ஈஎம்ஐ அவகாசத்தை மே 2020 வரை தேர்ந்தெடுத்துள்ளார் என்பதாக வங்கி எடுத்துக் கொள்ளும்.
மார்ச் மாதத்துக்கான ஈஎம்ஐ ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டால், வாடிக்கையாளர் அவகாசத்துக்கு பிறகு விண்ணப்பிக்கலாம் மேலும் மார்ச் மாதத்துக்கான ஈஎம்ஐ தவனை தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
ஹெச்டிஎப்சி வங்கி கடன் தவனை அவகாசத்துக்கு விண்ணப்பிக்க வாடிக்கையாளர் ஒரு செயல்முறையை பின்பற்ற வேண்டும். வங்கி கடன் எண்ணை கையில் வைத்துக் கொண்டு வங்கியின் இணையதளத்துக்கு சென்று அதற்கான இணைப்பில் விண்ணப்பம் செய்யலாம்.
கோவிட் -19 காரணமாக எந்தவித நிதி நெருக்கடியையும் சந்திக்காத வாடிக்கையாளர்கள் கடன் தவனை தொகையை தொடர்ந்து செலுத்த வங்கி கேட்டுக் கொள்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil