Advertisment

கொஞ்சம் அதிர்ச்சி தரும் அறிவிப்பு தான்! இனிமேல் கவனமாய் இருங்கள் எச்டிஎப்சி வாடிக்கையாளர்களே

அடுத்த நாள் முதல் அபராதம் செலுத்த வேண்டிய சூழல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hdfc bank netbanking

hdfc bank netbanking

hdfc bank net banking :எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த முக்கிய அறிவிப்பு. குறிப்பாக எச்டிஎப்சி வங்கியின் கிரேடிட் கார்டை பயன்படுத்துபவர்கள் இனிமேல் கவனமாய் இருங்கள். இல்லையென்றால் தேவையில்லால அபராத கட்டணம் கட்டும் சூழ்நிலை ஏற்படும்.

Advertisment

உங்களை கிரேடி கார்டு வாங்கி கொள்ளுங்கள், குறைவான வட்டி தான் பயப்படாதீர்கள் என்று ஆசையைக் காட்டி கிரேடிட் கார்டு வாங்க வைப்பர்கள் இனிமே சார்ஜ் போடவும் தயராகி விட்டார்கள். ஆம், கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருட்களைத் தவணை முறையில் அல்லது முழு பணத்தையும் செலுத்தி வாங்கும் போது அதற்கான கட்டணம் அல்லது தவணையை சரியான தேதிக்குள் செலுத்தவில்லை எனில் அடுத்த நாள் முதல் அபராதம் செலுத்த வேண்டிய சூழல் வரும்.

எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பில் 100 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் போது அதை செலுத்தத் தவறினால் அபராதம் ஏதும் கிடையாது.எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் ரூ.100 முதல் ரூ. 500 வரையிலான கிரெடிட் கார்டு கட்டணத்தைச் சரியான நேரத்தில் செலுத்தத் தவறினால் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பில் ரூ. 501 முதல் 5,000 ரூபாய் வரையிருக்கும் போது அதை செலுத்த ஒரு நாள் தவறினாலும் 400 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.எச்டிஎப்சி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் ரூ. 5,000 முதல் ரூ. 20,000 வரையிலான கட்டணத்தைத் தாமதமாகச் செலுத்தும் போது ரூ.500 அபராதமாகச் செலுத்த வேண்டும்.

LIC - யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்!

எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு பில் 20,000 ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கும் போது அதைச் செலுத்தச் சரியான தேதிக்குள் செலுத்தத் தவறினால் 700 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment