/tamil-ie/media/media_files/uploads/2020/07/5-32.jpg)
iob netbanking online iob bank
hdfc bank netbaking online : இன்றைய அவசர உலகில் ஆன்லைன் ட்ரான்சேக்ஷன் முறை அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்று. தேவைப்படும் போது ஒரு அக்கவுண்ட்லிருந்து மற்றொரு அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்ப முன்பு நிறைய மெனக்கெட வேண்டும்.
ஆனால் அந்த தொல்லை இப்போது இல்லை. இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே எந்த அக்கவுண்டுக்கு வேண்டுமென்றாலும் பணத்தை அனுப்பி வைக்கலாம். பாதுகாப்பான ஆன்லைன் ட்ரான்சேக்ஷன் முறைகள் பல இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன.
எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ மேலும் பல வங்கிகள் பாதுகாப்பான மொபைல் பேங்கிங் அப்ளிகேசன் நடைமுறைப்படுத்தி வருகின்றன இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி வங்கியின் மொபைல் பேங்கிங்கை வாடிக்கயாளர்களுக்காகவே மிகச் சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது.
ஐஓபி வங்கியின் புதிய வட்டி.. வாடிக்கையாளர்கள் செம்ம ஹாப்பி!
சமீபத்தில் எச்டிஎப்சி இன்டர்நெட் பேங்கிங் சேவையில் சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நாட்கள் சேவை பாதிக்கப்பட்டது. பின்பு ஒரு சில நாட்களில் சரிசெய்யப்பட்டு மீண்டும் பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பட்டது.
சேவைக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள்:
1. NEFT/EFT
ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு ரூ. 2.50 கட்டணம். 1 லட்சம் வரையிலான பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் கட்டணம். 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 15ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைக்கு ரூ. 25 கட்டணம்.
2. RTGS
2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 25 ரூபாய். 5 லட்சத்திற்கும் மேல் பணபரிமாற்றத்திற்கு 50 ரூபாய் .
3. NEFT
இந்த சேவை எச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.