HDFC Bank Netbanking, How To Use: HDFC (ஹெச்.டி.எஃப்.சி.) வங்கியின் இன்டர்நெட் பேங்கிங் இரு தினங்கள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பான விளக்கத்தை HDFC வங்கி நிர்வாகம் அளித்திருக்கிறது. HDFC நெட்பேங்கிங் முறை தொடர்பான எளிமையான ‘ஸ்டெப்’களை இங்கு காணலாம்.
இந்தியாவில் முன்னணி வங்கிகளில் ஒன்றாக HDFC வங்கி திகழ்கிறது. பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த வங்கியின் நெட் பேங்கிங் நடைமுறை திங்கட்கிழமை (டிசம்பர் 2) காலை முதல் முற்றிலும் முடங்கியது. HDFC வங்கி செயலியும் (ஆப்) இயங்கவில்லை. இதனால் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமலும், மாதத்தின் முதல் வாரம் முக்கியமான பில்களை செட்டில் செய்ய முடியாமலும் வாடிக்கையாளர்கள் திணறினார்கள்.
இந்தச் சூழல் செவ்வாய்க் கிழமையும் நீடித்தது. இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் பலர் தங்கள் குமுறல்களை சமூக வலைதளத்தில் கொட்டித் தீர்த்தனர். இதற்கு HDFC வங்கி நிர்வாகம் தனது ட்விட்டர் கணக்கில், ‘அதிக முன்னுரிமை கொடுத்து இதை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் நெட் பேங்கிங் வழக்கம்போல செயல்படும்’ என கூறியிருக்கிறது. எனினும் இதற்கான கால அளவு குறித்து HDFC வங்கி நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
HDFC நெட் பேங்கிங் பயன்படுத்தும் முறை குறித்தும் எளிய ஸ்டெப்களில் இங்கு காணலாம். வங்கியின் வாடிக்கையாளராக நீங்கள் இருந்தால், நெட் பேங்கிங் அக்கவுண்ட் வசதியை நீங்கள் வங்கியில் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு Customer ID, NetBanking Password (IPIN) கொடுக்கப்பட்டிருக்கும்.
1. நெட் பேங்கிங் அக்கவுண்டை லாக் இன் செய்ய உங்களது Customer ID, Password ஆகியவற்றை பயன்படுத்தவும்.
2. உங்களது பதிவு செய்த செல்போன் எண்ணை அதில் சரி பார்த்துக் கொள்ளவும். நீங்கள் க்ளிக் செய்தவுடன் உங்கள் செல்போன் எண்ணுக்கு ஓடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) வரும். அதை பதிவு செய்வதன் மூலமாக உங்களது ஆன் லைன் பறிமாற்றத்தை செய்து கொள்ளலாம்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Hdfc bank netbanking hdfc bank mobile app how to use hdfc net banking
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை எப்போது? 3 நாட்களில் முடிவெடுக்கும் ஆளுநர்
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறேன் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ்அழகிரி
டிராகன் பழத்திற்கு சமஸ்கிருத பெயர் : குஜராத் முதல்வரின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
சீரம் இன்ஸ்டிடியூட்-ல் திடீர் தீவிபத்து : 5 பேர் பலியானதாக தகவல்