hdfc bank netbanking : தனியார் வங்கிகளோடு ஒப்பிடுகையில் எச்டிஎப்சி வங்கி சில பல மாற்றங்களை அண்மையில் அறிவித்தது. சில அறிவிப்புகள் பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும் ஒருசில அறிவிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்சியை அளித்துள்ளனர்.
அந்த வகையில் இப்போது எச்டிஎப்சி அறிவித்திருக்கும் மாற்றத்தை தெரிந்துக் கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களின் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் 0.1 % உயர்த்தியுள்ளது எச்டிஎப்சி வங்கி.
இந்த கடன் திட்ட வட்டி விகித உயர்வு, மிதவை வட்டி முறையில், வீடு கடன் பெற்றவர்களின் தவணை செலவு அதிகரிக்கும்.எச்டிஎப்சி வங்கி வழங்கி வந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக் கடன், தற்போது 8.95 சதவீத வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது (பெண்களுக்கு 8.90%). 30 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் தற்போது 9.10 சதவீத வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது (பெண்களுக்கு 9.05%).
உங்களின் சந்தேகத்திற்கு விடை இதோ... எஸ்பிஐ ஏடிஎம் pin பெறுவது எப்படி?
இந்த கடன் திட்டங்களின் மீதான் வட்டி உயர்வு யாருக்கெல்லாம் பொருந்தும் என்ற விரிவான தகவல் இல்லை. இருந்த போதும் ஏற்கனவே கடன்களை வாங்கி இருக்கும் வாடிக்கையாளர்கல் இனிமேல் வட்டி விகிதம் சற்றும் அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும்.