HDFC Bank News In Tamil: கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பெற்ற கடனுக்கான மாத தவனைத் தொகையை 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஹெச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அந்த சலுகைகளை அப்படியே வழங்கி உள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி தனது இணையதளத்தில், “தங்கள் வங்கியில் மார்ச் 1, 2020-க்கு முன்னர் சில்லறை தவணைக் கடன் அல்லது வேறு ஏதேனும் சில்லறை கடன் வசதிகளைப் பெற்ற அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த கடன் மாத தவனையை செலுத்துவதற்கான அரசு அறிவித்த அவகாசத்தைப் பெற குதியுடையவர்கள்” என்று தெரிவித்துள்ளது.
https://youtu.be/tMrCfEs-vWI
வாடிக்கையாளர்கள் தவனையை வசூலிக் வேண்டாம் என்று வங்குயில் தற்காலிக தடை கோரலாம். மார்ச் 1, 2020 க்கு முன்னர் அவர்கள் தாமதமாக செலுத்துபவர்களாக இருந்தாலும் அவர்களின் கோரிக்கைகள் வங்கி தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.
ஹெச்டிஎஃப்சி வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் மூன்று மாத கால அவகாசத்திற்கு தவனை வசூலிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை தேர்வு செய்தால், 2020 மே 31 வரை வங்கி எந்த ஈ.எம்.ஐ கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடம் கேட்காது. கடனின் ஒப்பந்த விகிதத்தில் தடைக்காலத்திற்கான நிலுவைத் தொகையின் வட்டி தொடரும். அதே போல, கடன் செலுத்துவதற்கான தவனைகள் நீட்டிக்கப்படும். மார்ச் 2020 மாதத்திற்கான ஈ.எம்.ஐ செலுத்தப்பட்டு, ஏப்ரல் & மே 2020-க்கான தவனை வசூலிக்க தடை விதிக்கப்பட்டிருந்தால், கடன் காலம் 2 மாதங்கள் நீட்டிக்கப்படும் என்று ஹெச்டிஎஃப்சி வங்கி கூறுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் ஈ.எம்.ஐ வைத்திருந்தாலும் வாடிக்கையாளர்கள் மூன்று மாத கால அவகாசத்தை தனித்தனியாகக் கேட்கலாம்.
இந்த மாத தவனை செலுத்துவதற்கான அவசகாசம் தள்ளிவைப்பு கிரெடிட் கார்டுகளுக்கும் உண்டு. கிரெடிட் கார்டைப் பொருத்தவரை, 2020 மார்ச் 1 முதல் 2020 மே 31 வரை செலுத்த வேண்டிய கடன்களில் கிரெடிட் தனியாக உள்ளது. தவனையை செலுத்துவதற்கான தற்காலிக தடை 2020 மே 31 வரை தள்ளிவைக்க அனுமதிக்கப்படுகிறது.
2020 மே 31 க்குப் பிறகு உரிய தேதியில் குறைந்தபட்ச தொகை அல்லது மொத்த நிலுவை மற்றும் திரட்டப்பட்ட வட்டி கட்டணங்களை நீங்கள் செலுத்த வேண்டும்.
ஹெச்டிஎஃப்சி வங்கியின் 022-50042333, 022-50042211 என்ற எண்ணை அழைத்து அது காட்டும் வழிமுறைகளைப் பின்பற்றவும் அல்லது கடன் ஈ.எம்.ஐ.யில் இருந்து மூன்று மாத அவகாசத்தை வாடிக்கையாளர் விரும்பினால் வங்கியின் இணையதளத்தில் உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு தவனை அவகாசத்தைப் பெறுவதற்கு, (அ) இந்த காலகட்டத்தில் நிலுவைத் தொகையை தானாக முன்வந்து ஒத்திவைக்கவும், அதாவது, பனம் இல்லை என்பதற்கு (பி) என்று கூறுவதற்கு நெட் பேங்க்கிங் / மொபைல் பேங்க்கிங் மூலம் தானாக பணம் செலுத்தும் முறை தற்போது பயன்பாட்டில் இருந்தால் அதை முடக்குங்கள். இந்த தவனையை நிறுத்திவைக்கும் அவகாச காலம் முடிந்த பின் அவை மீண்டும் செயல்படுத்தப்படும்.
வாடிக்கையாளர்கள் ஈ.எம்.ஐ வசூலிக்கும் தடையை விரும்பவில்லை என்றால் அவர்கள் மேலும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் வங்கி தெரிவித்துள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Hdfc bank news in tamil hdfc bank moratorium hdfc loan due hdfc net banking hdfc bank online fraud alerts
திமுக அணி விறுவிறு கூட்டணி ஒப்பந்தம்: அதிமுக அணியில் நீடிக்கும் இழுபறி
தமிழகத்தில் மதுவிலக்கு இனி கனவுதானா? வாக்குறுதி தரக்கூட முன்வராத கட்சிகள்
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
36 வயது… விவாகரத்து… ஆனாலும் மகிழ்ச்சி: திவ்யதர்ஷினி ‘டைமிங்’ வீடியோ
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி : யார் திட்டத்தை யார் காப்பி அடித்தது?