7.90 சதவீதம் வரை வட்டி: ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி
ஹெச்டிஎஃப்சி வங்கி, 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான 2 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கு வழக்கமான குடிமக்களுக்கு 3% முதல் 7.20% வரை ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஹெச்டிஎஃப்சி வங்கி, 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான 2 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கு வழக்கமான குடிமக்களுக்கு 3% முதல் 7.20% வரை ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் புதிய வட்டி விகிதங்கள் பிப்.3,2024ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளன.
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் பிப்.3,2024ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளன.
Advertisment
புதிய வட்டி விகிதங்கள்
ஹெச்டிஎஃப்சி வங்கியானது சாதாரண மக்களுக்கு 4.75% முதல் 7.40% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 5.25% முதல் 7.90% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது. அதன்படி, 7.40% மற்றும் 7.90% என்ற அதிகபட்ச வட்டி விகிதங்கள் ஒரு வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குக் கிடைக்கும்.
ஹெச்டிஎஃப்சி ஃபிக்ஸட் டெபாசிட் சாதாரண குடிமக்கள் வட்டி விகிதம்
Advertisment
Advertisements
ஃபிக்ஸட் டெபாசிட் நாள்கள்
வட்டி விகிதம் % (ரூ.2 கோடிக்கும் மேல் ரூ.5 கோடிக்குள்)
7-14 நாள்கள்
4.75%
15-29 நாள்கள்
4.75%
30-45 நாள்கள்
5.50%
46-60 நாள்கள்
5.75%
61-89 நாள்கள்
6.00%
90 நாள்கள்- 6 மாதத்துக்குள்
5.75%
6 மாதம் 1 நாள் முதல் 9 மாதத்துக்குள்
6.65%
9 மாதம் 1 நாள் முதல் 1 ஆண்டுக்குள்
6.75%
15 மாதம் முதல் 18 மாதம்
7.05%
18 மாதம் -21 மாதம் வரை
7.05%
21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள்
7.05%
2 ஆண்டு 1 நாள் முதல் 3 ஆண்டுகள்
7.00%
3 ஆண்டு 1 நாள் முதல் 5 ஆண்டுகள்
7.00%
5 ஆண்டு 1 நாள் முதல் 10 ஆண்டுகள்
7.00%
மூத்தக் குடிமக்கள் வட்டி விகிதம்
மூத்த குடிமக்கள் 50 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.50% கூடுதல் வட்டி விகிதத்தை நிலையான வைப்புகளில் பெறுவார்கள். இந்த வட்டி விகிதங்கள் பிப்.3ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்தப் புதிய வட்டி விகிதத்தின்படி, 1 ஆண்டு முதல் 15 மாதங்கள் வரையிலான வட்டி விகிதங்களுக்கு மூத்தக் குடிமக்கள் 7.90 சதவீதம் வட்டி பெறுவார்கள். 5 ஆண்டு 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கும்.
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்
ஹெச்டிஎஃப்சி வங்கி, 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான 2 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கு வழக்கமான குடிமக்களுக்கு 3% முதல் 7.20% வரை ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள், அக். 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news