Advertisment

வாடிக்கையாளர்கள் வயிற்றில் புளியை கரைத்த புகைப்படம்! விளக்கம் அளித்தது எச்டிஎப்சி வங்கி.

அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் சேவை எண்ணிற்கு தொடர்புகொண்டு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hdfc bank passbook

hdfc bank passbook

hdfc bank passbook : பஞ்சாப் கூட்டுறவு வங்கியின் (பிஎம்சி) நிதிச் சிக்கல் அதன் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களை மிகப் பெரிய கவலையில் ஆற்றியுள்ளது. இழப்பீடு தொகையாக குறைவான தொகை மட்டுமே வழங்க முடியும் என ஒருபக்கம் வங்கி அறிவித்துவிட்டதால் வாடிக்கையாளர்கள் நிதி சிக்கலில் மாட்டிக் கொண்டு திண்டாடி வருகின்றனர். சிலர் அதிர்ச்சியில் இறந்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisment

இந்த நேரத்தில் பிரபல தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கியின் பாஸ்புக்கில் அச்சடிக்கப்பட்டிருந்த வாசகம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர். அந்த பாஸ்புக்கில் ரப்பர் ஸ்டாம்ப் வாசகத்தில் இடம்பெற்றிருந்தது இது தான்.

’வங்கியின் டெபாசிட்டுகள் அனைத்தும் டி.ஐ.சி.ஜி.சி (Deposit Insurance and Credit Guarantee Corporation) நிறுவனத்தின் காப்பீட்டில் உள்ளன. இந்த வங்கியில் ஏதேனும் நிதிச்சிக்கல் ஏற்பட்டால், அனைத்து டெபாசிட்தாரர்களுக்கும் டி.ஐ.சி.ஜி.சி நிறுவனமே செட்டில்மென்ட் செய்யும். நிதிச்சிக்கல் ஏற்பட்டதிலிருந்து இரண்டு மாத காலத்துக்குள் ஒவ்வொரு டெபாசிட்தாரர்களுக்கும் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய்வரை காப்பீட்டுத்தொகை வழங்கப்படும்'

publive-image

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் சேவை எண்ணிற்கு தொடர்புகொண்டு சந்தேகங்களை கேட்டு வந்தனர். இந்நிலையில் இதற்கு அந்த வங்கியே தெளிவாக பதில் அளித்துள்ளது.

இத்குக் குறித்து எச் எடி எப்சி வங்கி வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் ‘ 2017, ஜூன் 22-ம் தேதி டெபாசிட்டுக்கான இன்ஷூரன்ஸ் கவரேஜ் குறித்து ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அனைத்து வங்கிகளும், நிதி வழங்கும் அமைப்புகளும், வாடிக்கையாளர் பாஸ்புக்கில், டெபாசிட்டுக்கான இன்சூரன்ஸ் தொகை குறித்த தகவலை வாடிக்கையாளர் அறியும் வகையில் பதிவு செய்து தர வேண்டும்.

வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கான டெபாசிட் இன்ஷூரன்ஸ் கவரேஜ் குறித்து பாஸ்புக்கின் முதல் பக்கத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும’ என்று கூறியிருந்தது. எனவே இதைப்பார்த்து வாடிக்கையாளர்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்று விளக்கியுள்ளது.

இப்போது தான் எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment