இனி இந்த வங்கியில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்!

எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்துக்கொள்ள முடியும்

எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்துக்கொள்ள முடியும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hdfc netbanking hdfc net banking hdfc

நம்மில் பலர் டெபிட் கார்டை எடுத்து வர மறந்து ஏடிஎம் மையத்திற்கு சென்றிருப்போம். மளிகை பொருட்கள் வாங்கும்போது அல்லது அருகிலுள்ள கடைகளுக்கு செல்லும்போது பணத் தட்டுப்பாடு என்றால் உடனடியாக பணம் எடுக்க ஏடிஎம் மையத்தை தேடுகிறோம். கார்டு இல்லாமல் பணம் தேவைப்படும் நேரங்களில் எச்டிஎஃப்சி வங்கி 'Cardless cash withdrawal' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisment

HDFC வங்கி டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வழங்குகிறது. இதுகுறித்து HDFC வங்கியின் டிவிட்டர் பதிவில்,
வாடிக்கையாளர்கள் அனைவரும் கார்டு இல்லாமலேயே உடனடியாகவும், பாதுகாப்பாகவும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம். அல்லது மாதம் 25,000 ரூபாய் வரை ஏடுத்துக்கொள்ளலாம்.

பணம் எடுப்பது எப்படி?

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் இணைய வங்கியினை லாகின் செய்து கொள்ளுங்கள்.

Advertisment
Advertisements

அதில் fund transfer என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பிறகு cardless cash withdrawal என்பதை கிளிக் செய்யவும்.

அதன் பிறகு from என்ற ஆப்சனுக்கு நேராக உங்களது வங்கிக் கணக்கினை தேர்தெடுக்கவும். அதன் பிறகு யாருக்கு அனுப்ப வேண்டுமோ அதனை இரண்டாவது பாக்ஸில் கொடுத்து கிளிக் செய்யவும்.

அதன் பிறகு எவ்வளவு தொகை அனுப்ப போகிறீர்கள் என்பதை கொடுக்க வேண்டும். அதன் பிறகு confirm என்பதை கொடுக்கவும்.

இதன் பிறகு யாருக்கு பணம் அனுப்புகிறீர்களோ அவர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் போகும். அதனை வைத்து அருகிலுள்ள ஏடிஎம் சென்று வித்டிரா செய்து கொள்ளலாம்.

எனினும் இவ்வாறு கொடுக்கப்படும் request ஆனது 24 மணி நேரம் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.

பணத்தினை பெற்றவர் ஏடிஎம்மில் சென்று பணத்தினை எடுக்க, அவரது மொபைல் எண்ணுக்கு 4 இலக்க ஓடிபியும் மற்றும் 9 இலக்க ஐடி-யினை பெறுவர். ஹெச்.டி.எஃப்.சி ஏடிஎம்மிற்கு சென்று cardless cash என்ற ஆப்சனை தேர்தெடுக்கவும். அதன் பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபி மற்றும் ஐடியை கொடுத்து, எவ்வளவு தொகை என்பதையும் கொடுக்க வேண்டும். உங்களது விவரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Hdfc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: