hdfc credit card : டிஜிட்டல் உலகில் பொருட்களைத் தவணை முறையில் வாங்குவதற்கான ஒரு முக்கிய கருவியாக கிரெடிட் கார்டு உள்ளது.கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருட்களைத் தவணை முறையில் அல்லது முழு பணத்தையும் செலுத்தி வாங்கும் போது அதற்கான கட்டணம் அல்லது தவணையை சரியான தேதிக்குள் செலுத்தவில்லை எனில் அடுத்த நாள் முதல் அபராதம் செலுத்த வேண்டிய சூழல் வரும்.
அப்படி எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு பில்லை தாமதமாகச் செலுத்தும் போது எவ்வளவு அபராதம் என்று இங்குப் பார்ப்போம்.எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பில் 100 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் போது அதை செலுத்தத் தவறினால் அபராதம் ஏதும் கிடையாது.எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் ரூ.100 முதல் ரூ. 500 வரையிலான கிரெடிட் கார்டு கட்டணத்தைச் சரியான நேரத்தில் செலுத்தத் தவறினால் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பில் ரூ. 501 முதல் 5,000 ரூபாய் வரையிருக்கும் போது அதை செலுத்த ஒரு நாள் தவறினாலும் 400 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.எச்டிஎப்சி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் ரூ. 5,000 முதல் ரூ. 20,000 வரையிலான கட்டணத்தைத் தாமதமாகச் செலுத்தும் போது ரூ.500 அபராதமாகச் செலுத்த வேண்டும்.
ஐசிஐசிஐ பேங்கில் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் இருக்கா? அப்ப இந்த முக்கியமான தகவல் உங்களுக்கு தான்!
எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு பில் 20,000 ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கும் போது அதைச் செலுத்தச் சரியான தேதிக்குள் செலுத்தத் தவறினால் 700 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்