Advertisment

பிரபல வங்கியின் அறிவிப்பு.. பிக்சட் டெபாசிட் திட்டத்தின் மீதான வட்டி உயர்வு!

6 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரையான முதிர்வுக் காலத்துக்கும் வட்டி விகிதம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
covid 19 insurance policy crona insurance

covid 19 insurance policy crona insurance

hdfc fixed deposit interest : இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி பிக்சட் டெபாசிட் மீது ஆண்டுக்கு 3.50 சதவீதம் முதல் 7.30 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்கி வருகிறது. 7 நாட்களில் இருந்து 10 ஆண்டுகள் வரை வெவ்வேறு முதிர்வுக் காலங்களில் பிக்சட் டெபாசித் திட்டங்களைத் தருகிறது.

Advertisment

7 நாட்கள் முதல் 20 நாட்கள் வரையான முதிர்வுக் காலத்துக்கு 4.25 சதவீதமாகவே நீடிக்கிறது. 30 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரையாம முதிர்வுக் காலத்துக்கும் 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரையான முதிர்வுக் காலத்துக்கும் வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது.

பொதுவாக 30 முதல் 45 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட் செய்தால் 5.50% வட்டி கொடுக்கிறது. முன்னதாக இதே முதிர்வுக் காலத்துக்கான வட்டி 5.70% ரூபாயக இருந்தது. மூத்த குடிமக்களுக்கு 6.25% லிருந்து 6% ஆகக் மாறியுள்ளது. 46 நாட்கள் முதல் 6 மாதங்களுக்கான பிக்சட் டெபாசிட் வட்டியையும் 6.25% லிரிந்து 6% ஆகக் குறைத்துவிட்டது.

ஓராண்டுக்கான பிக்சட் டெபாசிட் வட்டியும் 0.20% குறைந்துவிட்டது. சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 7.10% வட்டியும் மூத்த குடிமக்களுக்கு இத்துடன் 5% கூடுதலாக, 7.15% வட்டியும் கிடைக்கும்.

1 முதல் 2 ஆண்டுகள் முதிர்வுக் காலம் உடைய பிக்சட் டெபாசிட்க்கு வழங்கிய வட்டி விகித்தையும் 0.10% குறைத்து 7.20% ஆக வைத்துள்ளது. 2 முதல் 3 ஆண்டுகள் முதிர்வுக் காலம் உடைய பிக்சட் டெபாசிட்க்கு வழங்கிய வட்டி விகித்தையும் 7.40% லிருந்து 7.30% ஆக குறைத்துவிட்டது. 3 முதல் 5 ஆண்டுகளுக்கான பிக்சட் டெபாசிட்டில் வட்டி விகிதம் 7.25% ஆகவே உள்ளது.

பயமே வேண்டாம்! லோன் வாங்க இந்தியன் வங்கியை நம்பி செல்லலாம்

5 முதல் 10 ஆண்டுகளுக்கான பிக்சட் டெபாசிட் செய்தால் அளிக்கும் வட்டியை மட்டும் 0.50% உயர்த்தி, 7% ஆக நிர்ணயித்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment