ஹெச்.டி.எஃப்.சி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்: ஹெச்.டி.எஃப்.சி வங்கி சில குறிப்பிட்ட காலங்களுக்கான நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை ரூ.3 கோடிக்கும் குறைவான தொகைக்கு 20 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) வரை உயர்த்தியுள்ளது.
இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 24, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த உயர்வுக்குப் பிறகு, வங்கியானது 4 ஆண்டு 7 மாதங்கள் - 55 மாதங்கள் வரையிலான காலப்பகுதியில் பொதுக் குடிமக்களுக்கு 7.40% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.90% என்ற அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது.
வங்கி வட்டி விகிதம்
மேலும், ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கியானது பொதுக் குடிமக்களுக்கு 7 முதல் 29 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 3% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
30 முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 3.50% வட்டி கிடைக்கும். அதே சமயம் 46 நாட்கள் முதல் ஆறு மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்கள் 4.50% பெறும்.
தொடர்ந்து, ஆறு மாதங்கள் முதல் ஒரு நாள் மற்றும் ஒன்பது மாதங்களுக்கும் குறைவாக உள்ள வைப்புகளுக்கு, வங்கி 5.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒன்பது மாதங்கள் மற்றும் ஒரு நாள் மற்றும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதிக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வங்கி 6% வட்டி விகிதத்தை வழங்கும்.
வங்கி | ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் பொது (%) | மூத்தக் குடிமக்கள் (%) |
7-14 நாள்கள் | 3.00% | 3.50% |
15-29 நாள்கள் | 3.00% | 3.50% |
30-45 நாள்கள் | 3.50% | 4.00% |
46-60 நாள்கள் | 4.50% | 5.00% |
61-89 நாள்கள் | 4.50% | 5.00% |
90 நாள்கள் -6 மாதங்கள் | 4.50% | 5.00% |
6 மாதம் 1 நாள் முதல் 9 மாதத்துக்குள் | 5.75% | 6.25% |
9 மாதம் 1 நாள் முதல் 1 ஆண்டுக்குள் | 6.00% | 6.50% |
1 ஆண்டு - 15 மாதங்கள் | 6.60% | 7.10% |
15-18 மாதங்கள் | 7.10% | 7.65% |
18-21 மாதங்கள் | 7.25% | 7.75% |
21 மாதங்கள் - 2 ஆண்டுகள் | 7.00% | 7.35% |
2 ஆண்டுகள் 11 மாதம்- 35 மாதங்கள் | 7.35% | 7.85% |
2 ஆண்டு 11 மாதங்கள் 1 நாள் - 3 ஆண்டுகள் | 7.00% | 7.50% |
3 ஆண்டு 1 நாள் - 4 ஆண்டு 7 மாதங்கள் | 7.00% | 7.50% |
4 ஆண்டு 7 மாதங்கள் - 55 மாதங்கள் | 7.40% | 7.90% |
4 ஆண்டு 7 மாதம் 1 நாள் - 5 ஆண்டுகள் | 7.00% | 7.50% |
5 ஆண்டு 1 நாள்- 10 ஆண்டுகள் | 7.00% | 7.50% |
மேலும், ஒரு வருடம் முதல் 15 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 6.60% வட்டி விகிதமும், 15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான FD களுக்கு 7.10% வட்டி விகிதம் கிடைக்கும். 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் வங்கி 7.25%. HDFC வங்கி 21 மாதங்கள் மற்றும் இரண்டு ஆண்டுகள் மற்றும் பதினொரு மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இதுமட்டுமின்றி வங்கி 2 ஆண்டுகள் 11 மாதங்கள் - 35 மாதங்கள் வரையிலான காலப்பகுதியில் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை 20 bps உயர்த்தியுள்ளது. மேலும், எஃப்.டி வட்டி விகிதத்தில் மூத்தக் குடிமக்களுக்கு வங்கி 0.50 சதவீதம் அதிக வட்டி வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.