Home Loans | Hdfc | ஹெச்.டி.எஃப்.சி வங்கி ரெப்போ-இணைக்கப்பட்ட வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை 10-15 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 8.70 சதவீதத்தில் இருந்து 9.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதனால், ஒருவர் கணக்கிற்கான பொருந்தக்கூடிய வட்டி விகிதம் இப்போது சில்லறை முதன்மை கடன் விகிதத்திற்கு (RPLR) பதிலாக EBLR (வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதம்) உடன் இணைக்கப்படும்.
மேலும், புதிய ரெப்போ இணைக்கப்பட்ட வட்டி விகிதம் புதிய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என்று வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. பழைய வாடிக்கையாளர்கள் RPLR உடன் தொடரலாம்.
வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதம் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மறு கொள்முதல் ஒப்பந்தம் அல்லது மறு வாங்குதல் விருப்பத்தை குறிக்கும் ரெப்போ விகிதம் ஆகும்.
ஒரு நாட்டின் மத்திய வங்கி வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதமாக வரையறுக்கப்படுகிறது. தற்போதைய ரெப்போ விகிதம் 6.50% ஆக உள்ளது.
கடன் ஸ்லாப் விகிதம் கணக்கீடு
சம்பளம் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான சிறப்பு வீட்டுக் கடன் விகிதங்கள்:-
செலுத்த வேண்டிய கடன்கள் = பாலிசி ரெப்போ விகிதம் + 2.20% முதல் 2.80% = 8.70% முதல் 9.30% வரை காணப்படும்.
சம்பளம் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான நிலையான வீட்டுக் கடன் விகிதங்கள்:-
செலுத்த வேண்டிய கடன்கள் = பாலிசி ரெப்போ விகிதம் + 2.55% முதல் 3.30% = 9.05% முதல் 9.80% வரை காணப்படும்.
வீட்டுக் கடன் பெறுவது எப்படி?
ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் தனிநபர்கள் தங்கள் வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வீட்டுக் கடனைப் பெறலாம்.
வீட்டுக் கடன் பெற வயது 21 வயது ஆகும். அதிகப்பட்ச வயது 65 வயதாக உள்ளது. அதேபோல், ஊதியம் பெறும் நபர்களுக்கான குறைந்தபட்ச வருமானம் மாதம் ரூ. 10,000 ஆகவும், சுயதொழில் செய்பவர்களுக்கான குறைந்தபட்ச ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் ஆகவும் இருத்தல் அவசியம்.
மற்ற வங்கிகள்
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வழங்கும் தற்போதைய வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 9 சதவீதம் முதல் 10.05 சதவீதம் வரை இருக்கும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வீட்டுக் கடன் விகிதங்கள் 9.15 சதவீதம் முதல் அதிகபட்சமாக 10.05 சதவீதம் வரை இருக்கும்.
மறுபுறம், ஆக்சிஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன்களில் 8.75 முதல் 9.65 சதவீதம் வரை ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது.
கோடக் மகிந்திரா வங்கியை பொருத்தமட்டில், வீட்டுக் கடனை வெறும் 8.70 சதவீத வட்டியுடன் தொடங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“