Advertisment

வீடு கட்டணுமா... எச்.டி.எஃப்.சியின் இந்த சூப்பர் அறிவிப்பை கேட்டுட்டு போங்க!

ஏற்கனவே ஹெச்டிஎப்சி சில்லறை வீட்டுக் கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும் என ஹெச்டிஎப்சி அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
HDFC home loans HDFC cuts prime lending rates on home loans

HDFC home loans HDFC cuts prime lending rates on home loans

HDFC Home Loans: வீடு வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி ஹெச்டிஎப்சி (HDFC) வீட்டுக் கடன் மீதான சில்லறை பிரதான கடன் விகிதத்தை (retail prime lending rate) குறைத்துள்ளது.  இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு கடன் வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎப்சி (Housing Development Finance Corporation Limited) வீட்டுக் கடன் மீதான Retail Prime Lending Rate ஐ 5 bps அல்லது 0.05 சதவிகிதம் அளவுக்கு குறைத்துள்ளது. இது ஹெச்டிஎப்சி யில் இருந்து வீட்டு கடன் வாங்கும் ஏராளமானவர்களுக்கு பயனளிக்கும்.

Advertisment

மிகவும் நம்பகமான மற்றும் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் வாடிக்கையாளர்கள் (creditworthy customers) வணிக வங்கிகளில் இருந்து வாங்கும் கடனுக்கான விகிதம் தான் பிரதான கடன் விகிதம் (Prime Lending Rate PLR) எனப்படும். இது இந்திய ரிசர்வ் வங்கியால் (Reserve Bank of India) 2003-04 நிதி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க : குறைக்கப்பட்ட பி.எஃப். வட்டி விகிதம்… ஏமாற்றத்தில் தொழிலாளர்கள்!

வீட்டு கடனுக்கான விகிதத்தை தீர்மானிக்க, பொதுவாக வங்கிகள் பெஞ்ச்மார்க் PLR ஐ விட கூடுதலான சதவிகிதம் கட்டணம் வசூலிக்கும். கடன் வாங்குபவரின் நம்பகத்தன்மை, கடன் தொகை, கடன் காலம், quality of Collateral security ஆகியவை வேறு காரணங்கள்.

பெரும்பாலான வங்கிகள் கடன் விகிதங்களை குறைத்துள்ளன ஆனால் கொள்கை விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஹெச்டிஎப்சி குறைத்துள்ள விகிதங்கள் மார்ச் 9, 2020 முதல் அமலுக்கு வருகிறது.

நாட்டின் பெரிய தனியார் வீட்டு கடன் வழங்குபவர் வீட்டு கடன் விகிதத்தை குறைத்துள்ளது வீடுகளுக்கான தேவையை ஊக்கப்படுத்தும். ஏற்கனவே ஹெச்டிஎப்சி சில்லறை வீட்டுக் கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும் என ஹெச்டிஎப்சி அறிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Hdfc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment