hdfc house loan : வீட்டு கடன் வழங்குவதில் முன்னணி நிறுவனமான ஹெச்.டி.எப்.சி, வீட்டு கடனுக்கு முதல் ஆண்டு வட்டி 8.25 விழுக்காடாக குறைத்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் வீடு, குடியிருப்புகள் கட்டுவதற்கு வாங்கும் கடனுக்கு வங்கிகள் சில சலுகைகளை அளித்தன. இதன் படி முதல் ஆண்டு குறைந்த வட்டியும், அதற்கு அடுத்த ஆண்டுகளில் மாறும் வட்டி விகிதமும் வசூலிக்கப்படும் என்று அறிவித்தன.
இந்த இரு வித வட்டி முறையில் வழங்கப்படும் கடன் டீசர் லோன் (teaser loans) என்று குறிப்பிடப்படுகிறது. இந்த டீசர் லோன் திட்டத்தின் படி, ஹெச்.டி.எப்.சி வீட்டு கடன்களுக்கு 2019 ஆம் ஆண்டு மார்ச் வரை 8.25 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதற்கு அடுத்த ஆண்டு 9 விழுக்காடும், பிறகு மாறும் வட்டி விகிதத்தில் வட்டி வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து ஹெச்.டி.எப்.சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இது இரண்டு விதமான வட்டி முறைகளை கொண்டது. இந்த புதிய வட்டி விகிதம் எல்லா புதிய வீட்டு கடன்களுக்கும் பொருந்தும். கடன் அளவு எவ்வளவு தொகையாக இருப்பினும் புதிய வட்டி விகிதம் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.
இந்த டீசர் லோன் முறை சமீப காலங்களில், வீட்டு கடன் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இந்த டீசர் லோன் முறையால், பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி அதிக அளவு வீட்டு கடன் கொடுத்தது. மற்ற நிதி, வங்கிகளை பின்னுக்கு தள்ளிவிட்டது.
இந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா!
ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடனுக்கு இதுவரை 9.5 சதவீதமாக இருந்த வட்டி, இனி 9 சதவீதமாக இருக்கும். இது உடனடியாக அமலுக்கு வருவதாக எச்.டி.எப்.சி வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.