இந்தியாவின் ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி. ஆகிய இரு வங்கிகளும் ரூ 30 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.3 சதவீதம் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன.
இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் 2022-ம் ஆண்டுக்குள் சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக ரூ.30 லட்சம் வரை கடனுக்கான வட்டியை குறைக்க அரசு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டேட் வங்கி 25 புள்ளிகள் வட்டியை குறைத்து அறிவித்தது.
HDFC, ICICI House Loan Interest Reduced: இஎம்ஐ கட்டும் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு!
எஸ்பிஐயின் இந்த அறிவிப்பை அடுத்து தனியார் வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி.வங்கிகள் வீட்டுக் கடனில் 0.3 சதவீதம் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.
புதிதாக வீட்டுக்கடன் ரூ 30 லட்சம் வரை பெறும் பெண்களுக்கு வட்டி 8.35 %, ஏனையவர்களுக்கு 8.40 % வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 30 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை கடன் பெறும் வாடிக்கையாளர்ளுக்கு 8.50 % வட்டி என்பதில் மாற்றமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.75 லட்சத்துக்கு அதிகமாக கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி 8.75 % இருந்து 8.55 % குறைக்கப்பட்டுள்ளது.