ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, யெஸ் வங்கி: எந்த வங்கி எஃப்.டி-க்கு அதிக வட்டி

ஹெச்.டி.எஃப்.சி வட்டி விகிதங்கள் அக்டோபர் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன. தனியார் துறை வங்கிகளான, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் யெஸ் வங்கி வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

ஹெச்.டி.எஃப்.சி வட்டி விகிதங்கள் அக்டோபர் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன. தனியார் துறை வங்கிகளான, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் யெஸ் வங்கி வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Bank of Baroda launches Mahila Samman Savings Certificate

யெஸ் வங்கி ₹2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திற்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதங்கள் மாற்றப்படாத நிலையில் வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு நல்ல வருமானம் அளிக்கின்றன.
அந்த வகையில் தனியார் துறை வங்கிகளான, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் யெஸ் வங்கி வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

Advertisment

யெஸ் வங்கி

தனியார் வங்கியான யெஸ் வங்கி ₹2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திற்கான நிலையான வைப்பு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகு, வங்கியானது 3.25% முதல் 7.75% வரையிலான வட்டி விகிதங்களை பொதுக் குடிமக்களுக்கும், மூத்த குடிமக்களுக்கு 3.75% முதல் 8.25% வரையிலும் ஏழு நாட்கள் முதல் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் FDகளில் வழங்குகிறது.
திருத்தப்பட்ட FD விகிதங்கள் நவம்பர் 21, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன. யெஸ் வங்கி ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 7.25% வீதத்தையும், ஒரு வருடத்தில் இருந்து 18 மாதங்களுக்குள் 7.50% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

ஐ.சி.சி.ஐ வங்கி

Advertisment
Advertisements

ஐசிஐசிஐ வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு ஏழு நாள்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு 3% முதல் 7.1% வரை வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 3.5% முதல் 7.65% வரையிலும் வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் 16 அக்டோபர் 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகு, வங்கியானது 3% முதல் 7.20% வரையிலான வட்டி விகிதத்தை பொது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வழங்குகிறது. மூத்த குடிமக்கள் இந்த வைப்புத்தொகைக்கு 3.5% முதல் 7.75% வரை வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். இந்த வட்டி விகிதங்கள் அக்டோபர் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: