HDFC Minimum Balance Rules: தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கி தங்களது வாடிக்கையாளர்கள், அவர்களது வங்கிக் கணக்கில் குறைந்த பட்ச தொகையாக எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என்பது பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி மெட்ரோ நகரங்கள் மற்றும் நகர்புறத்தில் வசிக்கும் ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்கள் 10000 ரூபாயை குறைந்தபட்ச பராமரிப்புத் தொகையாக, அவர்களது ‘சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்டில்’ வைத்திருக்க வேண்டும்.
சிறுநகரத்தில் வசிப்போர் 5000 ரூபாயையும், கிராம புறத்தில் இருப்பவர்கள் 2500 ரூபாயையும் குறைந்த பட்ச சேமிப்புத் தொகையாக அவர்களது ஹெச்.டி.எஃப்.சி கனக்கில் வைத்திருக்க வேண்டும். இந்த விதி ‘ஜீரோ’ பேலன்ஸ் அக்கவுண்ட் ஹோல்டர்களுக்குப் பொருந்தாது. மேலும் தகவல்களுக்கு hdfcbank.com தளத்தை அணுகவும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Hdfc minimum balance rules