hdfc net banking : ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு பலரும் பழகிவிட்டோம். ஆனால் அதற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா? பேங்க் ஆஃப் பரோடா, எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் மூலமான ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் பற்றிய தகவல்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
இன்றைய அவசர உலகில் ஆன்லைன் ட்ரான்சேக்ஷன் முறை அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும்
பேங்க் ஆஃப் பரோடா:
ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான பண பரிவர்த்தனைகளுக்கு 15 ரூபாயும், 2 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 25 ரூபாய் வசூலிக்கிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. 2 - 5 லட்சம் வரை காலை 8 மணி முதல் 11 மணி வரை பணம் அனுப்ப, ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனைக்கு 25 + ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது. காலை 11 மணி முதல் 1 மணி வரை 27 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு மணிக்கு மேல் 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எச்டிஎப்சி ஆன்லைன் பரிவர்த்தனைகள்:
ஆன்லைனில் நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனைகளுக்கு ஹெச்.டி.எஃப்.சி எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.
எச்டிஎப்சி வங்கிக் கிளையில் பரிவர்த்தனைக்கு:
10,000 வரையிலான நெஃப்ட் பரிவர்த்தனைக்கு 2.5+ ஜி.எஸ்.டி, அதற்கு மேல் ஒரு லட்சம் ரூபாய் வரை 5 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
2-5 லட்சம் வரையிலான, ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது. 5 லட்சத்துக்கு மேல் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
உங்கள் சம்பளத்தில் உங்களுக்கு வழங்கப்படும் பென்சன் எப்படி பெற வேண்டும் தெரியுமா?
எச்டிஎப்சிஐ.எம்.பி.எஸ் பரிவர்த்தனை:
ஒரு லட்சம் வரையிலான பரிவர்தனைக்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டி. 1-2 லட்சம் வரை 15 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி:
10 ஆயிரம் ரூபாய் வரை நெஃப்ட் பரிவர்த்தனை செய்ய 2.5 ரூபாய் + ஜி.எஸ். டி கட்டணம். 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை 5 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டணம். 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை 15 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டணமாகும். அதற்கு மேல், 10 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆர்.டி.ஜி.எஸ் பொருத்தவரை 25+ஜி.எஸ்.டி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 5-10 லட்சம் வரை 50 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது.
ஒரு லட்சம் வரையிலான ஐ.எம்.பி.எஸ் பரிவர்த்தனைக்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூல் செய்யப்படுகிறது. ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை 15 ரூபாயும், ஜி.எஸ்.டியும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.