hdfc netbanking hdfc bank netbanking :ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய விரும்புவோருக்கு பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ஈக்விட்டி போன்ற பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், ரிஸ்க் எடுக்காமல் முதலீடு செய்ய விரும்புவோருக்கு வெகு சில முதலீட்டு வாய்ப்புகளே இருக்கின்றன. அந்த வகையில் ஃபிக்ஸட் டெபாசிட் மிகச் சிறந்த தேர்வு.
Advertisment
ரிஸ்க் குறைவு என்றால் லாபமும் குறைவு. எனினும், ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களின் செல்லப் பிள்ளைதான் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள். பாரம்பரியமாகவே ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் மக்களுக்கு நல்ல வருமானத்தை கொடுத்திருக்கின்றன.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு நடவடிக்கையி விளைவாக பல்வேறு வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. ஏற்கெனவே வட்டிக் குறைப்பு பற்றி பல்வேறு வங்கிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், ஹெச்டிஎஃப்சி வங்கியும் ஃபிக்ஸட் டெபாச்டி திட்டங்களுக்கு வட்டியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விதிமுறைகள் படி எந்தெந்த திட்டங்களில் எவ்வளவு வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன முழு விபரம் இதோ.
7-14 நாட்கள் : 2.50%
15-29 நாட்கள் : 2.50%
30-45 நாட்கள்: 3%
46-60 நாட்கள்: 3%
61-90 நாட்கள்: 3%
91 நாட்கள் முதல் 6 மாதங்கள்: 3.5%
6 மாதங்கள் முதல் 9 மாதங்கள்: 4.4%
9 மாதங்கள் முதல் 1 ஆண்டு: 4.4%
1 ஆண்டு : 4.9%
1 ஆண்டு முதல் 2 ஆண்டு: 5%
2 ஆண்டு முதல் 3 ஆண்டு: 5.15%
3 ஆண்டு முதல் 5 ஆண்டு: 5.30%
5 ஆண்டு முதல் 10 ஆண்டு: 5.50%
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”