Hdfc netbanking hdfc net banking hdfc : எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் இந்த கொரோனா காலத்தில் வங்கிக்கு போக வேண்டிய் அவசியமே இல்லை போங்க. வீட்டில் இருந்தப்படியே உங்கள் வாட்ஸப் மூலம் எல்லா தகவல்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
Advertisment
வங்கி கிளைக்கு நேரடியாக செல்லாமலே சில அடிப்படை வங்கி பரிவர்த்தனைகளை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருந்தப்படி எளிதாக செய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதிதான் எச்டிஎப்சி வங்கியின் வாட்ஸ் ஆப் வங்கி வசதி
வங்கி கணக்கு இருப்பை தெரிந்துக் கொள்வது, உங்கள் கடன் அட்டையில் கிடைக்கக்கூடிய கடன் வரம்பை தெரிந்துக் கொள்வது அல்லது ஒரு வங்கி கிளையின் IFSC code ஐ கண்டுபிடிப்பது போன்றவை உட்பட இன்னும் பல வங்கி சேவைகளை எச்டிஎப்சி வங்கியின் வாட்ஸ் ஆப் வங்கி சேவை வழங்குகிறது.
வாட்ஸ் ஆப் வங்கி சேவையின் நன்மை என்பது, அடிப்படை வங்கி சேவைகள் 24 மணி நேரமும் வங்கி விடுமுறை நாட்களிலும் கூட கிடைக்க வழி செய்வதாகும். இதற்காக வங்கி எந்த கட்டணத்தையும் தனியாக வசூலிப்பதில்லை.
பதிவு செய்வதற்கு ஒருவர் 7065970659 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் அல்லது SUB என்று குறுஞ்செய்தியை (SMS) வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து அனுப்ப வேண்டும்.
உங்களுடைய வங்கி கணக்கு விவரங்கள் வேறு யாருடனும் பகிரப்படாது என்று வங்கி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. ரகசிய விவரங்களான PIN அல்லது கடவுச்சொல் (password) ஆகியவற்றை வாட்ஸ் ஆப்பில் உள்ளீடு செய்ய தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil