எச்.டி.எப்.சி கார்டு இருக்கா? நீங்கதான் இனி ஜாக்கிரதையா இருக்கணும்

கட்டணத்தைத் தாமதமாகச் செலுத்தும் போது ரூ.500 அபராதமாகச் செலுத்த வேண்டும்.

கட்டணத்தைத் தாமதமாகச் செலுத்தும் போது ரூ.500 அபராதமாகச் செலுத்த வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hdfc netbanking Hdfc

hdfc netbanking Hdfc

hdfc netbanking Hdfc : எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த முக்கிய அறிவிப்பு. குறிப்பாக எச்டிஎப்சி வங்கியின் கிரேடிட் கார்டை பயன்படுத்துபவர்கள் இனிமேல் கவனமாய் இருங்கள். இல்லையென்றால் தேவையில்லால அபராத கட்டணம் கட்டும் சூழ்நிலை ஏற்படும்.

Advertisment

உங்களை கிரேடி கார்டு வாங்கி கொள்ளுங்கள், குறைவான வட்டி தான் பயப்படாதீர்கள் என்று ஆசையைக் காட்டி கிரேடிட் கார்டு வாங்க வைப்பர்கள் இனிமே சார்ஜ் போடவும் தயராகி விட்டார்கள். ஆம், கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருட்களைத் தவணை முறையில் அல்லது முழு பணத்தையும் செலுத்தி வாங்கும் போது அதற்கான கட்டணம் அல்லது தவணையை சரியான தேதிக்குள் செலுத்தவில்லை எனில் அடுத்த நாள் முதல் அபராதம் செலுத்த வேண்டிய சூழல் வரும்.

hdfc netbanking Hdfc : கவனமாய் இருங்கள்!

எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பில் 100 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் போது அதை செலுத்தத் தவறினால் அபராதம் ஏதும் கிடையாது.எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் ரூ.100 முதல் ரூ. 500 வரையிலான கிரெடிட் கார்டு கட்டணத்தைச் சரியான நேரத்தில் செலுத்தத் தவறினால் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

Advertisment
Advertisements

எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பில் ரூ. 501 முதல் 5,000 ரூபாய் வரையிருக்கும் போது அதை செலுத்த ஒரு நாள் தவறினாலும் 400 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.எச்டிஎப்சி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் ரூ. 5,000 முதல் ரூ. 20,000 வரையிலான கட்டணத்தைத் தாமதமாகச் செலுத்தும் போது ரூ.500 அபராதமாகச் செலுத்த வேண்டும்.

எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு பில் 20,000 ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கும் போது அதைச் செலுத்தச் சரியான தேதிக்குள் செலுத்தத் தவறினால் 700 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Hdfc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: