hdfc netbanking login hdfc bank : தனியார் வங்கிகளில் சிறந்த வங்கி சேவையை அளித்துக் கொண்டிருக்கும் எச்டிஎப்சி வங்கிகளில் சேவிங் அக்கவுண்ட், டெபாசிட் தவிர பணத்தை சேமிக்கும் வகையான மற்றொரு சிறந்த திட்டமும் உள்ளது. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
Advertisment
வங்கிகளில் மாதந்தோறும் முதலீடு செய்து அதன் மூலம் குறிப்பிட்ட தொகையை லாபமாக பெற்றுத் தரக்கூடிய ஒரு திட்டம் தான் தொடர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் ரெக்கரிங் டெப்பாசிட்.
hdfc netbanking login hdfc bank : காரணம் இருக்கு!
இதன் மூலம் என்ன பலன் என்று கேட்கிறீர்களா? இந்த கணக்கில் நீங்கள் சேமிக்கும் தொகைக்கு மற்ற செமிப்பு கணக்கில் கிடைக்கும் லாபத்தைவிட 1 சதவீதம் அதிகப்படியான வட்டிவிமிதம் கிடைக்கும். அதே போல் உங்களுக்கு தேவைப்படும்போது நீங்கள் முழு பணத்தையோ அல்லது குறிப்பிட்ட தொகையை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
மீதமுள்ள பணம் வழக்கம் போல் சேமிப்பு கணக்கில் சேர்ந்துவிடும். சரி இந்த தொடர் வைப்பு நிதிக்கு எந்த வங்கி சிறந்தது? என சந்தேகம் உங்களுக்கு எழலாம். அதை தீர்க்கும் வகையில் கீழே முன்னணி வங்கியான எச்டிஎப்சி யில் செயல்படும் தொடர் வைப்பு நிதி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எச்டிஎப்சி வங்கியில் ஐசிஐசிஐ வங்கியைப் போன்றே 6 மாதம் முதல் 10 வருடம் வரை தொடர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொருத்து 8 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil