/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-12.jpg)
HDFC News In Tamil, HDFC Bank, HDFC Bank News, HDFC Bank Latest News, HDFC Bank News In Tamil, HDFC Netbanking, எச்டிஎப்சி வங்கி
HDFC News: HDFC(ஹெச்.டி.எஃப்.சி.) வாடிக்கையாளர்கள் 3-வது நாளாக தங்கள் நெட் பேங்கிங் அக்கவுண்டை பயன்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். HDFC கிரெடிட் கார்டு பயனாளர்கள் 5 மாற்று வழிகள் மூலமாக தங்கள் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.
HDFC வங்கியின் நெட் பேங்கிங், மொபைல் ஆப் ஆகியன கடந்த திங்கட்கிழமை முதல் முடங்கின. இதனால் வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாமல் திணறி வருகிறார்கள். சம்பளப் பட்டுவாடா, மாதத்தின் முதல் வாரம் மேற்கொள்ள வேண்டிய பில் செட்டில்மெண்ட்கள் ஆகியவற்றை மேற்கொள்ள முடியவில்லை.
HDFC Bank Netbanking : ஹெச்.டி.எஃப்.சி. நெட் பேங்கிங்
தொழில்நுட்ப ரீதியான இந்த முடக்கத்தை சரி செய்ய HDFC வங்கி நிர்வாகம் முழு முயற்சிகளை எடுத்தாலும், 3-வது நாளாக இந்த அவதி தொடர்கிறது. சிலருக்கு அவ்வப்போது நெட் பேங்கிங் பரிவர்த்தனை தொடர்பு கிடைத்ததாகவும் தெரிகிறது. இது குறித்து HDFC வங்கி நிர்வாகம் தனது ட்விட்டர் பதிவில், ‘இப்படியொரு நிலையை நாங்கள் விரும்பவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை. எனினும் 24 மணி நேரமும் இதை சரி செய்ய உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்’ என கூறப்பட்டிருக்கிறது.
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?
மேலும் HDFC கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் பில்களை செட்டில் செய்ய 5 மாற்று வழிகளை ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறது HDFC வங்கி. அவை வருமாறு:
1. ATM Funds Transfer
2. NEFT / Visa Money Transfer for other bank account holders
3. Autopay
4. Over the counter Cash Payment
5. Cheque Payment
ஹெச்.டி.எஃப்.சி நெட்பேங்கிங் முடக்கத்தால், பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.