எச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு வங்கி அறிவித்திருக்கும் மிகப் பெரிய ஆஃபர்!

டிக்கெட்கள் குறைந்தது இரண்டு பெற்றுக்கொண்டால் தான் 25% தள்ளுபடி

hdfc offers :தனியார் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவையில் மிகச் சிறந்த அர்ப்பணிப்பை வழங்கி வரும் எச்டிஎப்சி வங்கி தனது 25 ஆவது ஆண்டை நிறைவு செய்வதையொட்டி வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Book My Show, Zomato, Inox Movies, Bigbasket உள்ளிட்டவற்றை கொண்டு எச்டிஎப்சி வங்கி வழங்கும் 25% தள்ளுபடியை பெறலாம். இந்த சலுகைகளை எச்டிஎப்சியின் (டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட் வேலிடிட்டி மார்ச் 31 ,2020) கார்டைப் பயன்படுத்தி இணையதளம் மூலம் Inox Movies tickets, Zomato foods, Bigbasket shopping உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

ஜூமேட்டோ வில் குறைந்தப்பட்சம் ரூபாய் 500 மதிப்பில் புக் செய்யப்படும் உணவுகளுக்கு 25% தள்ளுபடியையும் , பிக் மை சோவில் டிக்கெட் புக் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூபாய் 50 வரை தள்ளுபடியும் , Bigbasket- யில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் குறைந்த பட்சமாக ரூபாய் 1500-க்கு பொருட்களை வாங்கினால் அவர்களுக்கு எச்டிஎப்சியின் வழங்கும் தள்ளுபடி ரூபாய் 250 ஆகும்.

அதே போல் “INOX MOVIES” டிக்கெட்கள் குறைந்தது இரண்டு பெற்றுக்கொண்டால் தான் 25% தள்ளுபடியை பெற முடியும்.

எஸ்பிஐ-யில் மியூச்சுவல் ஃபண்ட் தொடர வேண்டும் என்பது உங்களது வாழ்நாள் திட்டமா?

இந்தியாவில் எந்த ஒரு தனியார் வங்கியும் இத்தகைய சலுகைகளை வழங்காத நிலையில் எச்டிஎப்சி வங்கி வழங்கியதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close