கழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க, ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடனை நாடுவது பலரின் வழக்கம். உங்களுக்கும்கூட அந்த எண்ணம் இருக்கலாம். தனிநபர் கடன் பெறத் தயாராகிக்கொண்டிருப்பவர்கள் இதை சற்று படியுங்கள்.
பெர்சனல் கடன் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு அடமானம் எதுவும் பெறப்படாமல் கொடுக்கப்படுவதால், வங்கிக்கு ரிஸ்க் அதிகம். அந்த வகையில், இதற்கு வட்டி மிகவும் அதிகம். இதன் வட்டி விகிதம் பொதுவாக 15 முதல் 22%.
பெர்சனல் லோனை பொறுத்தவரையில் ஒவ்வொரு வங்கியும் ஒரு அளவை வைத்திருக்கிறது. இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி போன்றவை ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும்தான் பர்சனல் லோன் தருகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்.பி.ஐ. போன்றவை 15 லட்சம் ரூபாய் வரைதான் கடன் தரும். அதற்கு மேல் தேவைப்பட்டால் சிட்டி பேங்க், ஹெச்.டி.எஃப்.சி., ஏ.பி.என். அம்ரோ போன்றவற்றை தொடர்பு கொள்ளலாம்.
செம்ம நியூஸ்.. ஆன்லைன் வழியாகவே சேவிங்ஸ் அக்கவுண்டை தொடங்கலாம்!
பெர்சனல் லோன் வாங்க குறைவான ஆவணங்கள் கொடுத்தால் போதும். இருப்பிடம், அடையாளம், வருமானம் (சம்பள ரசீது, வருமான வரி கணக்கு தாக்கல் விவரம், வங்கி ரிப்போர்ட்) போன்றவற்றுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்களில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 12 முதல் 48 மாதங்களில் கடனைத் திரும்பக் கட்டலாம்.
இப்படி கடன் பல நிலைகள் இருக்கும் நிலையில்,
hdfc personal loan எச்டிஎஃப்சி வங்கி 10 விநாடிகளில் பெர்சனல் லோன்
சேவையை வழங்குகிறது.எச்டிஎஃப்சி வங்கி 10 விநாடிகளில் தனிநபர் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் இத்திட்டம் மூலம் பலன் பெறலாம் என வங்கி தெரிவித்துள்ளது.
இணையதள வங்கிச் சேவை மூலம் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் கடனை பெறலாம் எச்டிஎஃப்சி வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை உள்ளிட்டதேவைகளுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ -யில் அட்டகாசமான கார் லோன்.. இதுதான் செம்ம சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க!
காகித விண்ணப்பம் இல்லாத, முற்றிலும் வெளிப்படையானதாக இந்த கடன் திட்டம் இருக்கும் என எச்டிஎஃப்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.