Advertisment

அப்ளை செய்த 10 நிமிடத்தில் பர்சனல் லோன்.. கலக்கும் எச்டிஎப்சி!

எவ்வளவு வட்டி விகிதத்தை அளிக்கும் என்பதை தெளிவாக அறிந்த பின்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi account state bank of india

HDFC Personal Loan Interest Rates: கடன் அன்பை முறிக்கும் என்பார்கள். சில நேரங்களில் எலும்பை கூட முறிக்கும் என்று தெரிந்தும், சில சமயங்களில் கடன் வாங்குவது நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.

Advertisment

கடனைக் கண்டு அஞ்சிய காலம் போய், இன்றைக்கு கடன் சந்தை என்ற ஒன்றே பக்காவாக உருவாகிவிட்டது. வீட்டுக் கடன், தொழில் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன், மோட்டார் கடன், மொபைல் கடன் வரை ஏராளமான கடன்கள் சந்தையில் குவிந்து கிடக்கின்றன. இந்தக் கடன்களை பலரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கடன் வாங்கியிருக்கும் பட்சத்தில், எப்போதும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்களுடைய வருமானம், அன்றாடச் செலவு, எதிர்கால செலவு மற்றும் அவசர கால செலவு என ஒரு பட்ஜெட் போட்டு கொள்ள வேண்டும்.

வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கியிலும் மாறுபடும். குறைவான வட்டி என்று விளம்பரம் செய்வார்கள். ஆனால், தனிநபர் கடன் வாங்கும்போது வட்டியை மட்டும் பார்த்து கடன் வாங்கக் கூடாது. இதனுடன் வசூலிக்கப்படும் இதர கட்டணங்கள் என்னென்ன, எதற்கெல்லாம் அபராதம்

உண்டு என்பதையும் முன்பே தெரிந்துகொள்வது முக்கியம்.

சமீப காலமாக பர்சனல் லோன் சேவையில் தனியார் வங்கி நிறுவனுமான எச்டிஎப்சி வங்கி குறைந்த வட்டியில் பலனை அளித்து வருகிறது. தனிநபர் கடன் என்பது எவ்வளவு வட்டி விகிதத்தை அளிக்கும் என்பதை தெளிவாக அறிந்த பின்பு நீங்கள் லோனுக்கு அப்ளை செய்வது நல்லது.

எச்டிஎப்சி வங்கியில் பர்சனல் லோன் அப்ளை செய்த 10 நிமிடத்தில் அதற்கான வேலைகள் தொடங்கி விடும். நீங்கள் கடன் பெற தகுதியானவரா என்ற தகவல் தெரிந்துக் கொண்ட பின்பு அடுத்த வேலைகளில் ஈடுபடலாம். அதன் பின்பு தான் ஆவணங்கள் சமர்பிப்பு குறித்த தேவை.

பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கா? அப்ப இதுதான் உங்களுடைய மினிமம் பேலன்ஸ்!

எச்டிஎப்சி வங்கியை பொறுத்தவரையில் 15 லட்சம் வரை தனிநபர் கடன் அளிக்கப்படுகிறது. ஆரம்ப வட்டி விகிதம 11.5 சதவீதம் ஆகும். 5 வருடத்திற்குள் நீங்கள் கட்டி முடிக்கலாம். மினிமம் தொகை 1,999 ல் இருந்து தொடங்குகிறது. அதே போல் அபராத கட்டணம் 2 சதவீதம் முதல் 4 வரை ஆகும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment