இந்தியப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) வழிகாட்டுதல்களின்படி, ஸ்மால் கேப் ஃபண்டுகள் கார்பஸில் குறைந்தது 65 சதவீதத்தை ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த நிதிகள் ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் முதலீட்டு எல்லையைக் கொண்ட முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் குட் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம். இந்தப் ஃபண்டுகள் 25 சதவீதம் வரை வருமானம் அளித்துள்ளன.
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு
இந்த ஸ்மால் கேப் ஃபண்டில் குறைந்தப்பட்சம் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். திட்டத்தின் நிகர மதிப்பு ரூ.191.92 கோடி ஆகும். மேலும், 10 வருட காலத்தில் 25.67 சதவீத வருடாந்திர மகசூலை உருவாக்கியுள்ளது.
10 ஆண்டுகளில் ரூ. 10,000 மாதாந்திர பே-அவுட்டுடன் ஃபண்டில் தொடங்கப்பட்ட எஸ்ஐபி இப்போது ரூ. 53.66 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும்.
எஸ்.பி.ஐ ஸ்மால் கேப் ஃபண்டு
எஸ்.பி.ஐ ஸ்மால் கேப் ஃபண்டின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகள் ரூ.28,375 கோடி ஆகும். இதன் நிகர சொத்து மதிப்பு ரூ 200.45 ஆக உள்ளது. இதில், குறைந்தபட்ச முதலீடு (மொத்தம் ரூ 5,000 ஆகும். குறைந்தபட்ச முதலீடு (SIP) ரூ 500 ஆகும். நிதியின் செயல்திறன் மும்பை பங்குச் சந்தையில் 250 ஸ்மால்கேப் டிஆர்ஐ (TRI) குறியீட்டிற்கு எதிராக தரப்படுத்தப்பட்டுள்ளது. 10 வருட காலத்தில் 25.76 சதவீத வருடாந்திர மகசூலை உருவாக்கியுள்ளது. 10 ஆண்டுகளில் ரூ.10,000 மாதாந்திர பே-அவுட்டுடன் ஃபண்டில் தொடங்கப்பட்ட எஸ்ஐபி இப்போது ரூ.44.7 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும்.
ஹெச்.எஸ்.பி.சி ஸ்மால் கேப் ஃபண்டு
ஹெச்.எஸ்.பி.சி ஸ்மால் கேப் ஃபண்டின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகள் ரூ.14,787 கோடி ஆகும். மேலும், நிகர சொத்து மதிப்பு ரூ 94.45 கோடி ஆகவும், குறைந்தபட்ச முதலீடு (மொத்தம்) ரூ 5,000 ஆகவும், குறைந்தபட்ச முதலீடு (SIP) முதலீடு ரூ 1,000 ஆகவும் உள்ளது.
மேலும், நிதியின் செயல்திறன் நிஃப்டி ஸ்மால்கேப் 250 டி.ஆர்.ஐக்கு எதிராக தரப்படுத்தப்பட்டுள்ளது. 10 வருட காலப்பகுதியில் இது 21.56 சதவீத வருடாந்திர மகசூலை உருவாக்கியுள்ளது. 10 ஆண்டுகளில் ரூ. 10,000 மாதாந்திர பே-அவுட்டுடன் ஃபண்டில் தொடங்கப்பட்ட எஸ்ஐபி இப்போது ரூ. 43.96 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும்.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்டு திட்ட முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. ஆகவே, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விதிமுறைகளையும் கவனமாக படிக்கவும். மேற்கூறிய தரவுகள் கடந்தகால வருவாய் மட்டுமே; இது நிகழ்கால வருவாய்க்கு எவ்விதத்திலும் உறுதியளிக்காது. மேலும், இவை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் கருத்துக்கள் அல்ல.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“