Mutual Funds | லார்ஜ்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்வதால், ஸ்திரத்தன்மை கொண்ட நிதிகளாக கருதப்படுகின்றன. இவை அடிப்படையில் வலுவானவை மற்றும் பெரிய அளவில் உள்ளன. அதனால்தான் அவை ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களை விட நிலையானவை என முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.
Advertisment
இந்த லார்ஜ்கேப் ஃபண்டுகள் ஒரு வருடத்தில் 36.69 சதவீதமும், மூன்று ஆண்டுகளில் 18.69 சதவீதமும், ஐந்து ஆண்டுகளில் 18.50 சதவீதமும் அளித்துள்ளன.
லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்
மியூச்சுவல் ஃபண்டு
3 ஆண்டு வருவாய் (%)
ரூ.20 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு ரிட்டன்
நிப்பான இந்தியா லார்ஜ் கேப் ஃபண்டு
31.25
ரூ.11.23 லட்சம்
ஜே.எம் லார்ஜ் கேப் ஃபண்டு
30.99
ரூ.11.19 லட்சம்
பரோடா பி.என்.பி பரிபாஸ் லார்ஜ்கேப் ஃபண்டு
28.55
ரூ.10.83 லட்சம்
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ப்ளூசிப் ஃபண்டு
27.82
ரூ.10.73 லட்சம்
ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்டு
27.39
ரூ.10.67 லட்சம்
இந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைந்தப்பட்சம் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். மிட் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளுடன் ஒப்பிடுகையில் லார்ஜ் கேப் ஃபண்டுகள் ரிஸ்க் குறைந்ததாக நம்பப்படுகின்றன.
Disclaimer: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் எந்த குறிப்பிட்ட முதலீட்டு கருவிகளையும் அங்கீகரிக்கவில்லை. முதலீட்டாளர்களுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், மியூச்சுவல் ஃபண்டு திட்ட முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. ஆகவே, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விதிமுறைகளையும் கவனமாக படிக்கவும். மேற்கூறிய தரவுகள் கடந்தகால வருவாய் மட்டுமே; இது நிகழ்கால வருவாய்க்கு எவ்விதத்திலும் உறுதியளிக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“