32 சதவீதம் வரை ரிட்டன்; இந்த ப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் தெரியுமா?
ஃப்ளெக்ஸி-கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் வழங்கிய கடந்த மூன்று வருட வருமானத்தை ஆய்வு செய்து, பெஞ்ச்மார்க் இன்டெக்ஸ் ரிட்டர்ன்களை முடிந்தவற்றை பட்டியலிட்டுள்ளோம்.
கடந்த ஆண்டுகளில் 32 சதவீதம் வரை வருமானம் கொடுத்த ப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களின் ரிட்டன் விவரங்கள் இங்கு உள்ளன.
Advertisment
சில்லறை முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய முடிவு செய்யும் போது, ஃபண்ட் மேனேஜர்களின் கடந்தகால செயல்திறன் முதல் ஃபண்ட் ஹவுஸின் நற்பெயர் மற்றும் மேக்ரோ-எக்னாமிக் சூழ்நிலையில் இருந்து திட்டத்தின் வகை வரையிலான காரணிகளை கருத்தில் கொள்கிறார்கள்.
இங்கே, ஃப்ளெக்ஸி-கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் வழங்கிய கடந்த மூன்று வருட வருமானத்தை ஆய்வு செய்து, பெஞ்ச்மார்க் இன்டெக்ஸ் ரிட்டர்ன்களை முடிந்தவற்றை பட்டியலிட்டுள்ளோம்.
முதலில், ஃப்ளெக்ஸி-கேப் ஃபண்டுகள் என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.
ஃப்ளெக்ஸி-கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்
இந்த பரஸ்பர நிதிகள் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய கேப் பங்குகளுக்கு இடையே அவற்றின் சொத்து ஒதுக்கீட்டின் விகிதத்தை நிர்ணயிக்கின்றன. மேலும், இவை குறைந்தபட்சம் 65 சதவீத சொத்துக்களை ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முதலீடு செய்யும் திட்டங்களாகும்.
மல்டி-கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் போல் அல்லாமல், அவை சந்தை மூலதனத்தின் மூன்று வகைகளில் ஒவ்வொன்றிற்கும் குறைந்தபட்சம் 25 சதவீத சொத்துக்களை ஒதுக்கீடு செய்யவில்லை.
அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக விதிவிலக்காக அதிக வருடாந்திர வருமானத்தை அளித்து வரும் சிறந்த செயல்திறன் கொண்ட ஃப்ளெக்ஸி-கேப் திட்டங்கள் இங்கு உள்ளன.
வ.எண்
ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள்
ரிட்டர்ன்ஸ் (%)
பெஞ்ச்மார்க் (%)
01
குவாண்ட் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள்
32.96
19.62
02
ஜேஎம் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள்
27.11
19.59
03
எச்டிஎஃப்சி ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள்
26.73
19.62
04
பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்
21.66
19.62
05
எடெல்வீஸ் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
20.46
19.62
06
எடெல்வீஸ் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
20.46
19.62
அட்டவணையில் பார்ப்பது போல், குவாண்ட் ஃப்ளெக்ஸி கேப் 32.96 சதவீத வருடாந்திர வருவாயைக் கொடுத்தது, அதைத் தொடர்ந்து ஜேஎம் ஃப்ளெக்ஸி கேப் 27 சதவீத வருவாயை அளித்துள்ளது. எச்டிஎஃப்சி ஃப்ளெக்ஸி கேப் 26 சதவீத வருடாந்திர வருவாயை அளித்தது, அதைத் தொடர்ந்து பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் 21 சதவீத வருவாயைக் கொடுத்தது.
இருப்பினும்,கடந்த கால வருமானம் எதிர்கால வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“