25 சதவீதம் வரை ரிட்டன்: இந்த ஸ்மால் கேப் ஃபண்டுகள் தெரியுமா?
சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்மால் கேப் ஃபண்ட் (குவாண்ட் ஸ்மால் கேப்) கடந்த 10 ஆண்டுகளில் 39.06 சதவீத வருடாந்திர வருவாயை வழங்கியுள்ளது. எனினும் கடந்த கால வளர்ச்சி தரவுகள்..
Mutual Fund |மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, முதலீட்டாளர்கள் திட்டத்தால் வழங்கப்பட்ட கடந்த கால வருவாயை ஆய்வு செய்து அதே வகையிலான மற்ற ஃபண்டுகளுடன் ஒப்பிடுகின்றனர். அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளில் 25 சதவீதத்தை விட அதிக வருடாந்திர வருவாயை வழங்கிய ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளை இங்கே உள்ளன.
Advertisment
கடந்த 10 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்
10 ஆண்டு ரிட்டன் (%)
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்டு
39.06
பேங்க் ஆஃப் இந்தியா ஸ்மால கேப் ஃபண்டு
31.68
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு
30.88
எடெல்வெஸிஸ் ஸ்மால் கேப் ஃபண்டு
28.50
கனரா ரோபேக்கோ ஸ்மால் கேப் ஃபண்டு
27.76
கோடக் ஸ்மால் கேப் ஃபண்டு
27.38
ஆக்ஸிஸ் ஸ்மால் கேப் ஃபண்டு
26.41
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஸ்மால் கேப் ஃபண்டு
26.24
இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு
26.87
இந்தப் பட்டியலை பார்க்கும் போது, சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்மால் கேப் ஃபண்ட் (குவாண்ட் ஸ்மால் கேப்) கடந்த 10 ஆண்டுகளில் 39.06 சதவீத வருடாந்திர வருவாயை வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பாங்க் ஆஃப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் (31.68%), நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் (30.88%) மற்றும் எடெல்வீஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் (28.50%) ஆகியவை உள்ளன.
மேலும் இவை, கடந்த 10 ஆண்டுகளாக வருடாந்திர வருமானத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக வழங்கிய ஸ்மால் கேப் ஃபண்டுகள் ஆகும். அந்த வகையில், 27 ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த சொத்துக்களுடன் (AUM) ₹2.66 லட்சம் கோடிகள் உள்ளன.
எனினும் கடந்த கால தகவல்கள் நிகழ்கால ஃபண்டின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“