Fixed Deposits | ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஒரு வருடத்திற்கும் குறைவான குறிப்பிட்ட காலங்களுக்கான ஃபிக்ஸட் டெபாசி்ட வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
இந்தப் புதிய வட்டி விகிதங்கள் மே 15, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி, கனரா வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை 2024 பிப்ரவரி மாதமே எஃப்.டி வட்டி விகிதங்களை திருத்திவிட்டன.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை ஏப்ரல் 2024 இல் திருத்தியது. இந்த வங்கிகள் வழங்கும் எஃப்.டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, 46 நாள்கள் முதல் 179 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளின் மீதான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை 75 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) வரை உயர்த்தியுள்ளது. தற்போது வங்கி 4.75% லிருந்து 5.50% ஆக உயர்த்தியுள்ளது.
அதேபோல், 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான வட்டி விகிதத்தை 5.75% லிருந்து 6% ஆக 25 bps உயர்த்தியது. மேலும், 211 நாள்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான காலவரையறையில் எஃப்.டி விகிதங்களை 6% லிருந்து 6.25% ஆக வங்கி 25 bps உயர்த்தியுள்ளது.
கனரா வங்கி
2 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 4% முதல் 7.25% வரை வட்டி விகிதங்களை வங்கி வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 7.25% 444 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. வட்டி விகிதங்கள், பிப்ரவரி 19, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி
2 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 3.5% முதல் 7.25% வரை வட்டி விகிதங்களை வங்கி வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 7.25% 400 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஏப்ரல் 12, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 3% முதல் 7.20% வரை வட்டி விகிதங்களை வங்கி வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 7.20% 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு வழங்கப்படுகிறது. இந்தத் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் பிப்ரவரி 17, 2024 முதல் அமலில் உள்ளன.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 3% முதல் 7.25% வரை வட்டி விகிதங்களை வங்கி வழங்குகிறது. வங்கி 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான காலவரையறை 7% லிருந்து 7.25% ஆக உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள், பிப்ரவரி 9, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“