fixed-deposits | இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் அப்படியே தொடர்கிறது. இதனால் பல்வேறு வங்கிகளுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
பொதுவாக பல்வேறு வங்கிளும் ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு 6.8 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1 ஆண்டு வைப்புத்தொகைக்கு 6.8% சதவீதமும், 2-3 ஆண்டு டெபாசிட்டுக்கு 7%, 3-5 ஆண்டு எஃப்.டிக்கு 6.75%, 5 ஆண்டுக்கு மேலான டெபாசிட்களுக்கு 6.5% வட்டி வழங்குகிறது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 7.4 சதவீதம் வட்டியும், 390 நாள்கள் டெபாசிட்டுக்கு 7.3 சதவீதம் வட்டியும், 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுக்கு 7.05 சதவீதம் வட்டியும், 2 ஆண்டுக்கு மேற்பட்ட டெபாசிட்டுக்கு 7 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்ஸிஸ் வங்கி, 1 ஆண்டு டெபாசிட்டுக்கு 6.7 சதவீதம் வட்டியும், 2,3 மற்றும் 4 ஆண்டுகள் டெபாசிட்கள் முறையே 7.1,7 மற்றும் 7 சதவீதம் வட்டிடியும் வழங்குகிறது.
ஹெச்டிஎஃப்சி வங்கி
ஹெச்டிஎஃப்சி வங்கி, ஓராண்டு டெபாசிட்டுக்கு 6.6 சதவீதம் வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.1 சதவீதம் வட்டியும் கிடைக்கிறது.
தொடர்ந்து, 15-18 மாதங்கள், 18-21 மாதங்கள், 21-2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 11 மாதங்கள் 35 மாதங்கள் டெபாசிட்களுக்கு 7.1, 7.25,7 மற்றும் 7.15 வட்டி விகிதங்கள் வழங்குகின்றது.
கோடக் மகிந்திரா வங்கி
கோடக் மகிந்திரா வங்கி 1 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.1 சதவீதம், 2 ஆண்டுக்கு 7.15 சதவீதம், 3-4 ஆண்டுகள் டெபாசிட்டுக்கு 7 சதவீதம் மற்றும் 5 ஆண்டுகள் டெபாசிட்டுக்கு 6.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா வங்கி 1-2 ஆண்டுகள் டெபாசிட்டுக்கு 7 சதவீதம் வட்டியும், 2-3 ஆண்டுகளுக்கு 7.25 சதவீதம் வட்டியும், 4 ஆண்டுகள் கால டெபாசிட்டுக்கு 6.5 சதவீதம் வட்டியும் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“