ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கனரா வங்கி மற்றும் யெஸ் வங்கி உள்ளிட்ட பல பெரிய வங்கிகள் கடந்த சில வாரங்களில் தங்களுடைய நிலையான வைப்பு வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) பொது குடிமக்களுக்கு 3.50% - 7.10% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.60% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. "400 நாட்கள்" (அம்ரித் கலாஷ்) என்ற குறிப்பிட்ட தவணைக்கால திட்டம் 7.10% வட்டி விகிதத்தில் பொதுகுடிமக்களுக்கும், 7.60% மூத்தக் குடிமக்களுக்கும் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் 30-செப்டம்பர்-2024 வரை செல்லுபடியாகும். திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூன் 15, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி வழக்கமான குடிமக்களுக்கு 3% முதல் 7.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 3.50% முதல் 7.75% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 7.25% மற்றும் 7.75% 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூலை 5, 2024 முதல் அமலுக்கு வருகின்றன.
கனரா வங்கி
கனரா வங்கியானது 7 நாள்களில் இருந்து 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதங்களை பொது மக்களுக்கு 4 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரையிலும் வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 7.25% மற்றும் 7.75% 444 நாட்கள் டெபாசிட்களுக்கு வழங்கப்படும். திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஜூன் 11, 2024 முதல் பொருந்தும்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வழக்கமான குடிமக்களுக்கு 3% முதல் 7.20% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 3.50% முதல் 7.75% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 7.75 மற்றும் 7.20 15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூலை 5, 2024 முதல் அமலில் உள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கமான குடிமக்களுக்கு 3.50% முதல் 7.25% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.75% வரையிலும் வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 7.25% மற்றும் 7.75% 400 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூன் 10, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
யெஸ் வங்கி
யெஸ் வங்கி வழக்கமான குடிமக்களுக்கு 3.25% முதல் 8% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 3.75% முதல் 8.50% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 8% மற்றும் 8.50% 18 மாத காலத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூன் 8, 2024 முதல் பொருந்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“