35 சதவீதம் வரை ரிட்டன்: டாப் ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்!
கடந்த 5 ஆண்டுகளில் 40 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த டாப் ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இதில், பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு முதலிடத்தில் உள்ளது.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் என்றாலே முதலில் லார்ஜ் கேப் ஃபண்டுகள்தான் மனதிற்குவரும். பொதுவாக இந்தத் திட்டங்களில் லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் என 3 வகைகள் உள்ளன. இந்த 3 வகை திட்டங்களில் ஒருவர் முதலீடு செய்யலாம். இதிலும் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் தற்போது நல்ல வருவாய் கொடுக்கின்றன. இந்தப் ஃபண்டுகள் அவற்றின் முதலீடுகளில் குறைந்தது 65 சதவிகிதம் ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்கின்றன.
Advertisment
5 ஆண்டுகளில் டாப் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்டுகள்
வ.எண்
ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
ரிட்டன் (%)
01
குவாண்ட் ப்ளெக்ஸ கேப் ஃபண்டு
35.32
02
ஜே.எம் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
27.46
03
ஹெச்.டி.எஃப்.சி ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
30.11
04
எடெல்வெஸிஸ் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
41.33
05
பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
47.65
குவாண்ட் ப்ளெக்ஸ கேப் ஃபண்டு ஐந்து ஆண்டுகளில் ரூ.10,000 எஸ்.ஐ.பி முதலீடு ரூ.18,83,438 ஆக மாறியுள்ளது. ஜே.எம் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு ஐந்தாண்டு காலத்தில் ரூ.20,000 மாதாந்திர எஸ்.ஐ.பி மொத்த மதிப்பு ரூ.32,04,409 ஆக காணப்படுகிறது.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்டு திட்ட முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. ஆகவே, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விதிமுறைகளையும் கவனமாக படிக்கவும். மேற்கூறிய தரவுகள் கடந்தகால வருவாய் மட்டுமே; இது நிகழ்கால வருவாய்க்கு எவ்விதத்திலும் உறுதியளிக்காது. மேலும், இவை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் கருத்துக்கள் அல்ல.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“