Advertisment

50 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த லார்ஜ்கேப் ஃபண்டுகள்; செக் பண்ணுங்க!

கடந்த ஒரு வருடத்தில் 40 சதவீதத்துக்கும் அதிகமான வருமானத்தை வழங்கிய லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளன. குவாண்ட் லார்ஜ் கேப் ஃபண்ட், பேங்க் ஆஃப் இந்தியா ப்ளூசிப் ஃபண்டு,

author-image
WebDesk
New Update
mutual-fund

50 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த லார்ஜ்கேப் ஃபண்டுகள் இங்கு உள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Mutual Fund | கடந்த ஒரு வருடத்தில் 40 சதவீதத்துக்கும் அதிகமான வருமானத்தை வழங்கிய லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளன. குவாண்ட் லார்ஜ் கேப் ஃபண்ட், பேங்க் ஆஃப் இந்தியா ப்ளூசிப் ஃபண்ட், ஜேஎம் லார்ஜ் கேப் ஃபண்ட் மற்றும் நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட் போன்றவை இதில் அடங்கும்.

எந்தவொரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பும், முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஒரு திட்டத்தால் வழங்கப்படும் வருமானத்தை அடிக்கடி ஆய்வு செய்வது அவசியம். இது மற்ற ஃபண்டுகளின் திட்டத்தை ஒப்பிட்டு பார்க்க உதவும்.

Advertisment

லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் என்றால் என்ன?

லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது செபியின் பரஸ்பர நிதிகளின் வகைப்பாட்டின் படி, குறைந்தபட்சம் 80 சதவீத சொத்துக்களை லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்களைக் குறிக்கிறது.

லார்ஜ் கேப் பங்குகள் சந்தை மூலதனத்தின் படி 1 முதல் 100 வரை நிலைநிறுத்தப்படும் நிறுவனங்களின் பத்திரங்கள் ஆகும்.

சிறந்த 5 லார்ஜ் கேப் திட்டங்கள்

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ப்ளூசிப் ஃபண்டு 41.80%
நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்டு 46.42%
ஜே.எம். லார்ஜ் கேப் ஃபண்டு 47.09%
பேங்க் ஆஃப் இந்தியா ப்ளூசிப் ஃபண்டு 49.09%
குவாண்ட் லார்ஜ் கேப் ஃபண்டு 56.31%

சிறப்பாக செயல்படும் திட்டங்களில் குவாண்ட் லார்ஜ் கேப் ஃபண்ட் (56 சதவீதம்), பேங்க் ஆஃப் இந்தியா புளூசிப் ஃபண்ட் (49 சதவீதம்), ஜேஎம் லார்ஜ் கேப் ஃபண்ட் (47 சதவீதம்) மற்றும் நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட் (46 சதவீதம்) ஆகியவை அடங்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Mutual Fund
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment