வரி சேமிப்பு எஃப்.டி; 7% வரை வட்டி: கனரா உள்ளிட்ட 10 வங்கிகளின் லிஸ்ட்
ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை வரி சேமிப்பு எஃப்டிகளுக்கு 7 முதல் 6.5 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
வரி சேமிப்பு எஃப்.டி திட்டங்கள் | வரி திட்டமிடல் நிதியாண்டின் இறுதி வரை காத்திருக்கக்கூடாது. நிதியாண்டு தொடங்கும்போதே உங்கள் வரிச் சேமிப்பு முதலீடுகளைத் திட்டமிடத் தொடங்க வேண்டும். வரி விலக்கு திட்டங்களில், பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), பங்கு-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்களில் மாதாந்திர எஸ்.ஐ.பி இ.எல்.எஸ்.எஸ், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF), வரி சேமிப்பு நிலையான வைப்புக்கள் (FDகள்) ஆகியவை அடங்கும்.
Advertisment
வங்கி
வரி விலக்கு எஃப்டி வட்டி விகிதம் (%)
ஆக்ஸிஸ் வங்கி
7.00%
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
7.00%
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
7.00%
கனரா வங்கி
6.70%
பேங்க் ஆஃப் பரோடா
6.50%
பஞ்சாப் நேஷனல் வங்கி
6.50%
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
6.50%
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
6.50%
இந்தியன் வங்கி
6.50%
பேங்க் ஆஃப் இந்தியா
6.00%
ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை வரி சேமிப்பு எஃப்டிகளுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன. வரி சேமிப்பு எஃப்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1.5 லட்சமானது ரூ.2.12 லட்சமாக உயரும். கனரா வங்கி வரி சேமிப்பு எஃப்.டிகளுக்கு 6.70 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்களில் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1.5 லட்சமானது ரூ.2.09 லட்சமாக உயரும்.
பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை வரி சேமிப்பு FDகளுக்கு 6.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன. வரி சேமிப்பு FDகளில் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1.5 லட்சமானது ரூ.2.07 லட்சமாக உயரும். ரிஸ்க் இல்லாத முதலீட்டாளர்கள் மற்றும் குறைந்த வரி செலுத்துவோர் வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்களை விரும்புகின்றனர். இது 5 ஆண்டுகால சேமிப்பு ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“