45% வரை ரிட்டன்: பெஸ்ட் ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்!
ஜே.எம் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு (JM Flexicap Fund) ஒரு வருடத்தில் 63.31 சதவிகித வருமானத்தை அளித்தது, அதாவது யாராவது ₹2 லட்சம் முதலீடு செய்திருந்தால், அது ₹3.26 லட்சமாக வளர்ந்திருக்கும்.
கடந்த ஓராண்டில் 45 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த பெஸ்ட் ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம். மேலும், ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்டுகளின் கடந்த ஒரு வருட வருமானத்தை பார்க்கலாம்.
Advertisment
ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்
இவை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைக் குறிக்கின்றன. அவை குறைந்தபட்சம் 65 சதவீத சொத்துக்களை ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முதலீடு செய்கின்றன. நவம்பர் 6, 2020 அன்று செபியின் சுற்றறிக்கையின்படி, லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் ஓபன் எண்ட் டைனமிக் ஈக்விட்டி திட்டங்களாகும்.
ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள்
1 ஆண்டு ரிட்டன்
ஸ்ரீராம் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
47.65%
இன்வெஸ்கோ இந்தியா ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
49.17%
ஐ.டி.ஐ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
52.27%
மோதிலால் ஓஸ்வால் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
52.83%
குவாண்ட் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
63.31%
ஜே.எம் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
67.03%
பேங்க் ஆஃப் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
68.29%
பேங்க் ஆஃப் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டால் அதிகபட்ச வருமானம் 68.27 சதவிகிதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜேஎம் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் கடந்த ஒரு வருடத்தில் 67.03 சதவிகிதத்தை வழங்கியது. அதாவது, ஓராண்டுக்கு முன் ஒருவர் ₹2 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், முதலீடு ₹3.34 லட்சமாக வளர்ந்திருக்கும்.
ஜே.எம் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு (JM Flexicap Fund) ஒரு வருடத்தில் 63.31 சதவிகித வருமானத்தை அளித்தது, அதாவது யாராவது ₹2 லட்சம் முதலீடு செய்திருந்தால், அது ₹3.26 லட்சமாக வளர்ந்திருக்கும். எவ்வாறாயினும், வரலாற்று வருமானங்கள் வழிகாட்டும் மற்றும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய முடிவெடுப்பதற்கான ஒரே அளவுகோலாக இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் அவை எதிர்கால வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“