Advertisment

எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் vs போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்: எந்த முதலீட்டில் உயர் வட்டி?

எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் முதலீட்டு திட்டங்களில் எந்தத் திட்டத்தில் அதிக வட்டி கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
The Latest Fixed Deposit Interest Rates

வங்கிகளின் FD வட்டி விகிதங்கள் தொகை மற்றும் காலத்தைப் பொறுத்து மாறுபடும்.

ரிஸ்க்-எவர் முதலீட்டாளர்கள் பொதுவாக தங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவின் முக்கிய பகுதியாக நிலையான வைப்புகளை (FDs) தேர்வு செய்கிறார்கள்.

சீரான வருமானம், எளிதாக திரும்பப் பெறுதல் விதிமுறைகள் மற்றும் குறுகிய கால அல்லது நீண்ட கால வெவ்வேறு காலகட்டங்களில் முதலீடு செய்வதற்கான விருப்பம் ஆகியவை நிலையான வைப்புகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களிடையே பிரபலமாக்கியுள்ளது.

Advertisment

தற்போது, பல்வேறு வங்கிகள் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. மேலும், வாடிக்கையாளர்களை ஈர்க்க சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களையும் வழங்குகின்றன.

மறுபுறம், போஸ்ட் ஆபிஸ் சிறு சேமிப்புத் திட்டமானது பல்வேறு காலங்களின் நிலையான வைப்புத் திட்டத்தையும் வழங்குகிறது. வைப்புத் தொகையின் காலத்தைப் பொறுத்து இவற்றின் வட்டி விகிதங்கள் மாறுபடும்.

ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித அறிவிப்பைப் பொறுத்து வங்கிகள் நிலையான வைப்பு வட்டி விகிதங்களைத் திருத்துகின்றன, அதே நேரத்தில் தபால் அலுவலக நேர வைப்பு (POTD) வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கத்தால் திருத்தப்படுகிறது.

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்

2023 ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் அலுவலக நேர வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

உயர்வுக்குப் பிறகு, 1 ஆண்டு வைப்புத்தொகைக்கு 6.9 சதவீத வட்டியும், 2 ஆண்டு வைப்புத்தொகைக்கு 7 சதவீதமும், 3 ஆண்டு வைப்புத்தொகைக்கு 7 சதவீதமும், 5 ஆண்டு வைப்புத்தொகைக்கு 7.5 சதவீதமும் வட்டி விகிதம் கிடைக்கும்.

மேலும் இந்தத் திட்டங்களுக்கு 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கும் கிடைக்கும்.

எஸ்பிஐ எஃப்டி திட்டம்

பாரத ஸ்டேட் வங்கி (SBI) வழக்கமான வைப்புத் தொகையில் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான தொகைக்கு வழக்கமான குடிமக்களுக்கு 3 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

சிறப்பு அம்ரித் கலாஷின் வைப்புத்தொகையில், வங்கி 400 நாட்கள் (தோராயமாக 13 மாதங்கள் அல்லது ஒரு வருடம் ஒரு மாதம்) 7.10 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் 15-ஆகஸ்ட்-2023 வரை செல்லுபடியாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits Post Office Scheme Sbi Fixed Deposit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment